நாக சைதன்யா பெயர் டாட்டூவை அழித்த சமந்தா?… விவகாரத்துக்குப்பின் அதிரடி முடிவு !

சென்னை : நடிகை சமந்தா, நாக சைதன்யா பெயர் டாட்டூவை அதிரடியாக அழித்துள்ளார்.

நடிகை சமந்தா அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, குடும்பத்தை நடத்தி வந்தார். யார் கண் பட்டதோ நாகசைதன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

சமந்தா

சமந்தா

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அக்டோபர் 2ம் தேதி தாங்கள் பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

சாய் டாட்டூ

சாய் டாட்டூ

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யா மீது கொண்ட காதலால் தன் முதுகில் 'Ye Maaya Chesave' என்ற படத்தின் நினைவாக 'ymc' என்ற டாட்டூம், மணிக்கட்டுடில் இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் நாகசைதன்யாவும் ஒரே மாதிரி பச்சை குத்தியிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் நாகசைதன்யாவின் செல்லப்பெயரான சாய் டாட்டூ ஒன்றை தனது இடுப்பில் குத்தியிருந்தார்.

டாட்டூவை அழித்துள்ளார்

டாட்டூவை அழித்துள்ளார்

நடிகை சமந்தா முதுகிலும், இடுப்பில் குத்தியிருந்த டாட்டூவை முற்றிலுமாக எடுத்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படத்தில் டாட்டூ காணாமல் இருப்பதை ரசிகர்கள் பார்த்து டாட்டூ அழிக்கப்பட்டுள்ளதை கன்ஃபார்ம் செய்துள்ளார்கள். நாக சைதன்யாவின் பெயரை ஆசை ஆசையாய் பச்சை குத்தினாரே, தற்போது அதை அழிக்கும் போது எவ்வளவு மன வேதனை அடைத்து இருப்பார் என்று சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ப்ளீஸ் அதுமட்டும் வேண்டாம்

ப்ளீஸ் அதுமட்டும் வேண்டாம்

நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் ஒருவர், டாட்டூ குத்திக் கொள்வது பற்றி கேட்டார். அதற்கு சமந்தா தயவு செய்து டாட்டூ மட்டும் குத்திக் கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X