சமந்தாவின் பாலிவுட் படத்தை தயாரிக்கிறார் நடிகை டாப்ஸி? தீயாய் பரவும் தகவல்!

மும்பை: நடிகை சமந்தா நடிக்கும் பாலிவுட் படத்தை நடிகை டாப்ஸி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் அவரது நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் வெளியானது.

இந்த வெப் சீரிஸில் படுக்கையறை காட்சிகள் மற்றும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை சமந்தா. இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் சமந்தா.

விவாகரத்து அறிவிப்பு

விவாகரத்து அறிவிப்பு

இருப்பினும் அது சமந்தாவின் சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியானார் நடிகை சமந்தா. இந்நிலையில் கடந்த மாதம் நடிகை சமந்தாவும் அவரது கணவரான நாக சைதன்யாவும் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.

ஃபீமேல் சென்ட்ரிக் படங்கள்

ஃபீமேல் சென்ட்ரிக் படங்கள்

இதற்கு காரணம் நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான காட்சிகளில் நடித்ததே என கூறப்பட்டது. இருப்பினும் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு ஃபீமேல் சென்ட்ரிக் படங்களில் கமிட்டானார் நடிகை சமந்தா.

தோழியுடன் ஆன்மிக சுற்றுலா

தோழியுடன் ஆன்மிக சுற்றுலா

விவாகரத்தை அறிவித்த கையோடு நடிகை சமந்தா இமயமலை பகுதிக்கு ஆன்மிக சுற்றுலா சென்றார். மன அமைதிக்காக அவர் சுற்றுலா சென்றதாக கூறப்பட்டது. அவர் ரிஷிகேஷ் உள்ளிட்ட பல பகுதிகளில் தனது தோழியுடன் இருந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

அவுட்ஸைடர்ஸ் ஃபிலிம்ஸ்

அவுட்ஸைடர்ஸ் ஃபிலிம்ஸ்

இந்நிலையில் நடிகை சமந்தா பாலிவுட் படத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டிலும் ஃபீமேல் சென்ட்ரிக் படத்தில் நடிக்க சமந்தாவை, பிரபல நடிகையான டாப்ஸி அணுகியதாக கூறப்படுகிறது. டாப்ஸி, அவுட்ஸைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

 போஸ்ட் புரோடக்ஷன் பணிகள்

போஸ்ட் புரோடக்ஷன் பணிகள்

இந்த பேனரில் சமந்தா நடிப்பதற்கு இருவரும் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. டாப்ஸி தனது நிறுவனத்தின் மூலம் ப்ளர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

தெலுங்கில் சாகுந்தலம் படத்தில் நடித்து வரும் நடிகை சமந்தா தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X