சமந்தாவுக்கு இப்படியும் ஒரு பிரச்னையா?.. அதனால்தான் கண் கலங்குகிறாராம்.. அவங்களே ஓபனாக சொல்லிட்டாங்க

சென்னை: சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி சுபம் என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் நடிப்பு, தயாரிப்பு என பிஸியாக இருக்கும் அவரை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சுபம் படம் மே ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் அதற்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. சமந்தாவும் மும்முரமாக அதில் கலந்துகொள்கிறார்.

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில காரணங்களால் அவரை பிரிந்தார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்ததும்; அவருக்கு வந்த மையோசிடிஸ் நோயும்தான் இந்தப் பிரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கான உண்மையான காரணம் என்று யாருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Samantha explains why her eyes are Tears

சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அவர்களது காதலுக்கு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வருடம் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் நடந்தது. அவர்களது திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். சைதன்யா போலவே சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமந்தாவின் நிலைப்பாடு என்ன?: ஆனால் இரண்டாவது திருமணத்தில் ஆர்வம் இல்லை என்றுதான் முன்பெல்லாம் சமந்தா சொல்லிவந்தார். சூழல் இப்படி இருக்க சமீபமாக அவரும், இயக்குநர் ராஜுவும் காதலித்துவருவதாக பேச்சுக்கள் ஓடுகின்றன. சமந்தாவும் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, 'இரண்டாவது திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன்' என தெரிவித்திருந்தார். அதனையடுத்து அவர் இன்னொரு திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

கண் கலங்கும் சமந்தா: இதற்கிடையே சமந்தா எந்த மேடை ஏறினாலும் அவர் கண் கலங்குவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை கவனித்த ரசிகர்களோ, 'நாக சைதன்யாவுடனான பிரிவு இன்னமும் அவரை கலங்க வைக்கிறது' என்று அடித்து கூறினார்கள். சூழல் இப்படி இருக்க தான் ஏன் அடிக்கடி கண்கள் கலங்குகிறேன் என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "நான் மேடையில் அடிக்கடி கண்கள் கலங்குகிறேன்.

என்ன காரணம்?: அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் எமோஷனலால் நான் கலங்குவதில்லை. அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் எனது கண்கள் சென்சிட்டிவ் ஆகிவிடும். அதன் காரணமாகத்தான் கண்ணீர் வரும். இந்தக் காரணத்தில்தான் நான் மேடைகளில் இருக்கும்போது என்னுடைய கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது. மற்றபடி நான் நன்றாகவும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன்" என்றார். அவரது இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்களோ அய்யய்யோ சமந்தாவுக்கு இப்படியும் ஒரு பிரச்னை இருக்கிறதா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

ரொம்பவே யோசித்தேன்: மேலும், சுபம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் எப்போதெல்லாம் விசாகப்பட்டினத்துக்கு வருகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் கிடைத்துவிடும். இங்கு படமாக்கப்பட்ட மஜிலி, ஓ பேபி ஆகிய திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. சுபம் படத்தை ஒரு யோசனையுடன் தொடங்கினேன்.இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X