Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சமந்தாவிற்கு என்ன பிரச்சினை.. விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் சாம்!
ஐதராபாத் : நடிகை சமந்தா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக உள்ளார்.
இவரது யசோதா உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
பாலிவுட்டிலும் அக்ஷய் குமாருடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
சமந்தா போல் வெப் சீரிஸ் பக்கம் போகும் விஜய் பட ஹீரோயின்: சீக்கிரமே தரமான அப்டேட் இருக்குதாம்
நடிகை சமந்தா
நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
சிறப்பான கேரியர்
தன்னுடைய திருமணம், நாக சைத்தன்யாவுடனான விவாகரத்து முடிவு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காத வகையில், இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதீஜா என்ற கேரக்டர் இவரை ரசிகர்களிடையே மேலும் பேவரைட்டாக மாற்றியுள்ளது.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி
முன்னதாக விஜய்யுடன் தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் சமந்தா நடித்துள்ள நிலையில், அப்போதே ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இவர் வந்துவிட்டார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தான் எப்போதும் முன்னணிதான் என்பதை நிரூபித்தார். தற்போது யசோதா, குஷி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
சமந்தா தோலில் பிரச்சினை?
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தவர் சமந்தா. சமீப காலங்களாக இவரது எந்த போட்டோஷுட்டும் வெளியாகவில்லை. இடையில் யசோதா டீசர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சமந்தாவின் முகத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்தான் தொடர்ந்து புகைப்படங்களை எடுக்காமல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிகிச்சை
முன்னதாக இவர் நடிக்க வந்த புதிதில் இதேபோன்ற பிரச்சினைகளை சந்தித்தார். அப்போது அது சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதே பிரச்சினையில் சிக்கியுள்ளார் சமந்தா. இதையடுத்து விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சமந்தா பறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.