சண்டை காட்சியில் டூப் போடல.. சிட்டாடல் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன்.. சமந்தா சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதன் பின் விஜய் தேவரகொண்டாவுடன், குஷிப்படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவிற்கு ஓடியது. இதன் பின் குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்து வந்தார். அப்போது அவர், படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சினிமா பின்புலம் இல்லாத சமந்தா, இவ்வளவு உயரம் தொட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவர் பல போராட்டங்களை சந்தித்துதான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை பெரியது. பல வதந்திகள், விமர்சனத்திற்கு உள்ளாகி மீண்டு வந்த பெண் போராளி என்றுதான் இவரை சொன்னால் பெருமையாக இருக்கும்.

Actress samantha fainted in citadel shooting

நடிகை சமந்தா: தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில வருடங்களில் அவரை பிரிந்தார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. பலரும் சமந்தாவை கடுமையாக இணையத்தில் விமர்சனம் செய்தனர். அவை அனைத்தையும், புன்னகையுடன் சமந்தா கடந்து வந்தார். விவாகரத்துக்கு இழப்பீடாக பல கோடிகளை நாகார்ஜுனா தரப்பு கொடுக்க முன்வந்த போதும், ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்லி தன்னம்பிக்கையுடன் தற்போதும் நடித்து வருகிறார்.

சிட்டாடல்: ஒருபக்கம், தோல் நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதற்காக சிகிச்சைகளையும் பெற்று வருகிறார். சமந்தாவால், ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத நிலையில் இருக்கிறார். ஆனாலும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பேமிலி மேன் எடுத்த இயக்குனரின் இயக்கத்தில் நடித்துள்ளார். இதில் சமந்தாவுடன் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிட்டாடல் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பல வருடங்களாக நடந்து வருகிறது. டப்பிங் முடிந்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த தொடரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளது.

மயங்கி விழுந்தேன்: இந்நிலையில், நடிகை சமந்தா, மையோசிடிஸ் நோயால் சிட்டாடல் படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாகத் தெரிவித்துள்ளார். குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. ஆக்‌ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன் என்று கூறியுள்ளார். இந்த சிட்டாடல் வெப் தொடரில் நடக்கும் போது தனது உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் டூப் போடாமல் அதில் சமந்தா நடித்துள்ளார். அந்த சண்டை காட்சியை முழுமையாக நடித்து முடித்துவிட்டு, திடீரென சமந்தா மயங்கி விழுந்துவிட்டாராம். இதன்பின் அவரை மருத்துவமனையில் படக்குழுவினர் அனுமதித்தனர். இந்த செய்தி அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இதை தற்போது சமந்தாவே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X