அவதூறு செய்தி வெளியிட்ட யூட்யூப் சேனல்ஸ்... வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா.. பரபரப்பு!

சென்னை: தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட சில யூட்யூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் சமூக வலைதளம் மூலம் தங்களின் விவாகரத்தை அறிவித்தனர்.

அவதூறு செய்திகள்

அவதூறு செய்திகள்


அதனை தொடர்ந்து நடிகை சமந்ததா பேசு பொருளாகி விட்டார். அவரது விவாகரத்தை சுற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சமந்தா வெப் சீரிஸ்களிலும் படங்களிலும் ஆபாசமாக நடித்ததாகவும், அவர் கருக்கலைப்பு செய்ததாகவும் மேலும் ஆடை வடிவமைப்பாளருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியானது.

யூட்யூப் சேனல்கள் மீது வழக்கு

யூட்யூப் சேனல்கள் மீது வழக்கு

இந்நிலையில் தன்னைப்பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்ட சில யூட்யூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை சமந்தா. அதன் படி தெலுங்கு யூட்யூப் சேனல்களான சுமன் டிவி, தெலுகு பாப்புலர் டிவி, மற்றும் சில யூட்யூப் சேனல்கள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கறிஞருக்கு நோட்டீஸ்

வழக்கறிஞருக்கு நோட்டீஸ்

இதுதொடர்பாக அந்த யூட்யூப் சேனல்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தன்னைப்பற்றியும் தனது திருமண வாழ்க்கை மற்றும் அவருக்கு தவறான தொடர்பு இருப்பதாக கூறி தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர் வெங்கட் ராவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை சமந்தா.

அனுமதிக்க மாட்டேன்

அனுமதிக்க மாட்டேன்

நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா இணைய தளத்திலும் குறிவைக்கப்படுகிறார். தன்னைப்பற்றிய நெகட்டிவான செய்திகள் பரவியதை தொடர்ந்து மற்றவர்கள் தன்னிடமிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக்கொண்டார் சமந்தா. மேலும் தான் எந்த விதமான எதிர்மறையும் தன்னை உடைக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

தானே எதிர்கொள்ளும் சமந்தா

தானே எதிர்கொள்ளும் சமந்தா

சமந்தாவுக்கு எதிராக தவறான செய்திகள் பரவி வந்த போது அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவோ அல்லது அவரது தந்தை நாகார்ஜுனாவோ சமந்தாவுக்கு ஆதரவாக நிற்கவில்லை. இந்நிலையில் தன் பிரச்சனையை தானே எதிர்கொள்ளும் வகையில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X