Don't Miss!
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- News
சரியும் அதானி.. "உண்மை வெளியே வரும்".. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? போட்டுடைத்த சு. வெங்கடேசன்!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா.. எந்த நாட்டுக்கு தெரியுமா?
சென்னை : நடிகை சமந்தா பிரபலமான நடிகையாக விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.
நாக சைத்தன்யாவை திருமணம் செய்த சமந்தா 4 ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்யும் முடிவை வெளியிட்டார்.
தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்துவந்த சமந்தா, தற்போது மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லூசு மாதிரி பேசாதீங்க..கடும் வாக்குவாதத்தில் அசீம், ஜனனி..ரணகளமான பிக் பாஸ் வீடு!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவரது பல படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளன. விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்திய அளவில் நடிக்கும் சமந்தா
இதேபோல தெலுங்கிலும் முக்கியமான பல நாயகர்களுடன் சமந்தா நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கின் முன்னணி நடிகரும் நடிகர் நாகார்ஜூனாவின் மகனுமான நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, தொடர்ந்து படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி இந்தியிலும் கவனம் செலுத்தினார்.

விவாகரத்து முடிவு
இதனிடையே நாக சைத்தன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டில் இருவரும் விவாகரத்து முடிவை வெளியிட்டனர். இவர்களின் இந்த முடிவு இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தினார் சமந்தா. பல வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்தார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டார்.

அரியவகை நோய் பாதிப்பு
இதனிடையே தற்போது மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சமந்தா. இதற்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டுவரும் சமந்தா ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனிடையே தற்போது ஆயுர்வேத சிகிச்சையையும் எடுத்து வருகிறார். தொடர்ந்து இந்த கடினமான நோயில் இருந்து நிச்சயம் போராடி மீண்டு வருவேன் என்றும் அவர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவில் மேல்சிகிச்சை
இதனிடையே இந்த நோய்க்காக மேல் சிகிச்சை பெறும்வகையில் அவர் தென்கொரிய நாட்டிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெலுங்கு மீடியாக்களில் தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் கொரிய ஸ்கின்கேர் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்தி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் விரைவில் தேறி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.