Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அசத்தலான க்ரீன் மேஜிக் ..அடடா இது நல்லா இருக்கே..சமந்தாவை புகழ்ந்த ரசிகர்கள் !
ஹைதராபாத் : நடிகை சமந்தா ரசிகர்களுக்காக செமயான க்ரீன் மேஜிக் ஒன்று செய்து காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் திரைப்பிரபலங்கள் மிகவும் ட்ரெண்டாக்கி வரும் சேலஞ்ச்களில் ஒன்று கிரீன் இந்தியா சேலஞ்ச்.
கிரீன் இந்தியா சேலஞ்சை பல்வேறு திரைப் பிரபலங்கள் செய்துவரும் நிலையில் சமீபத்தில் மகேஷ் பாபு, விஜய், சூர்யா, ஸ்ருதிஹாசன் என பலரும் செய்து அசத்தி காட்டிய நிலையில் தற்போது சமந்தா வித்தியாசமான க்ரீன் மேஜிக் ஒன்று செய்து காட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இசையமைப்பாளர் இஷான் தேவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
லீட் ரோலில்
தென்னிந்திய ரசிகர்களால் தற்பொழுது அதிகமாக ரசிக்கப்பட்டு கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சமந்தா தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் யூ டர்ன், ஓ பேபி உள்ளிட்ட வித்தியாசமான கதைகளில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
காத்துவாக்குல ரெண்டு காதல்
தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான "ஜானு" திரைப்படம் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து இருந்த நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து "காத்துவாக்குல ரெண்டு காதல்" என்ற திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
கிரீன் இந்தியா சேலஞ்சை
இவ்வாறு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டு பிஸியாக வலம் வரும் நடிகை சமந்தா இந்த லாக்டவுன் நேரத்தில் பல்வேறு புகைப்படங்களை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் எடுத்து வெளியிட்டு வரும் நேரத்தில், ஒரு சில சேலஞ்ச்களையும் செய்து அசத்தி வருகிறார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் திரைப் பிரபலங்கள் அனைவராலும் மிகப் பிரபலமாக டிரெண்ட்டாகி வரும் கிரீன் இந்தியா சேலஞ்சை, நடிகை சமந்தா, நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து செய்து காட்டி அசத்தி வித்தியாசமான ஒரு மேஜிக் செய்து காட்டி ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உணவின் முக்கியம்
கிரீன் கலர் உடையணிந்து பச்சை பசேலென வீட்டின் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தில் ஸ்டைலாக நின்றவாறு கிரீன் மேஜிக் ஒன்று செய்து சமந்தா அசத்தியுள்ளார். முதலில் கையில் வைத்திருக்கும் ஒரு சிறிய தொட்டியில் விதையை போடும் சமந்தா பின் அது துளிர்விடுகிறது, அதை தொடர்ந்து செடியாக மாறி பின் நமக்கு உண்ணும் உணவாக தயாராகிறது என்ற கான்செப்ட்டை மிக எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும் வகையில், மேஜிக்கை போன்று செய்து காட்டி அனைவருக்கும் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்த கிரீன் மேஜிக் வீடியோ தற்போது அனைவரையும் கவர்ந்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.