Samantha :தோனிக்காக பெரிய விசில் அடித்த சமந்தா -விஜய் தேவரகொண்டா.. பாட்டுப்பாடி அசத்தல்!
ஐதராபாத் :நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து குஷி படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷனை தற்போதே படக்குழுவினர் துவங்கியுள்ளனர். அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வீடியோகக்ளை வெளியிட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே போட்டிகள் குறித்து சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

தோனிக்காக விசிலடித்த சமந்தா : நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். பான் இந்தியா ஸ்டாராகவும் மாறியுள்ளார். தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்ததன்மூலம் பாலிவுட்டிலும் அதிகமான ரசிகர்களை பெற்றிருந்த சமந்தா, தற்போது மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல் வெப் தொடரில் இணைந்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்காக படக்குழுவினர் காத்திருந்து படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தனர். இந்தப் படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா, ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தனர். அதில் சிஎஸ்கே குறித்த கேள்விக்கு பதிலளித்த சமந்தா, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க, நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க என்று பாட்டுப் பாடி அசத்தினார். இதுமட்டுமில்லாமல் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் தோனிக்காக பெரிய விசில் அடித்தனர். மேலும் தோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.
அவர் ராஞ்சியா அல்லது சென்னையை சேர்ந்தவரா என்று தனக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். அந்த அளவிற்கு அவர் சென்னை மக்களோடு ஒன்றி போயுள்ளதாகவும் சமந்தா பாராட்டு தெரிவித்தார். சமந்தாவின் இந்தப் பேட்டியின்மூலம் அவர் தல தோனியின் மிகப்பெரிய ரசிகை என்பது வெளிப்பட்டுள்ளது. சமந்தாவின் இந்தப் பேட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
குஷி படம் காமெடி கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது. சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் சமந்தாவை கொஞ்சும் விஜய் தேவரகொண்டாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது. முன்னதாக வெளியான பாடல்காட்சியின் போது இந்த கிளிப்பிங்ஸ் எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











