Samantha: பீச்சில் மகளுடன் வேற லெவலில் ஆட்டம் போட்ட நடிகை.. சமந்தா என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?
சென்னை: நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிஸியான நடிகையாக அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறார். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணிகளுடன் இணைந்து படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா, திருமணமாகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள், பிகினி புகைப்படங்கள் என ரசிகர்களை சூடேற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற ஸ்ரேயா, பிகினி புகைப்படங்களை எடுத்து அதை பகிர்ந்திருந்தார்.

நடிகை ஸ்ரேயா சரண்: நடிகை ஸ்ரேயா சரண், அடுத்தடுத்த மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நாயகியாக நடித்துள்ள ஸ்ரேயா சரண், திருமணமாகி பெண் குழந்தைக்கு தாயான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் வட்டத்தை அதிகரித்து வருகிறார். இவரை 4 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். அடுத்தடுத்து குடும்பத்தினருடனான புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
20 ஆண்டுப்பயணம்: கடந்த 2001ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான இஷ்டம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஷ்ரேயா சரண், சந்தோஷம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து துஜிகே மேரி கசம் படம் மூலம் இந்தியிலும் அறிமுகமான ,ஷ்ரேயா சரணுக்கு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் முதல் படமாக அமைந்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்த ஷ்ரேயா, பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ரஜினிகாந்த், விஜய், சிம்பு, விக்ரம், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், கடைசியாக தமிழில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் நடித்துள்ளார்.
மகளுடன் பிகினியில் புகைப்படம்: இதையடுத்து தற்போது இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் உபேந்திராவுடன் இவர் நடித்திருந்த கப்ஜா படம் பான் இந்தியா படமாக வெளியாகி சிறப்பாக அமைந்தது. தற்போது ஷோ டைம் என்ற டிவி சீரிசில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷ்ரேயா கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாலத்தீவில் பிகினியில் போட்டோஷுட் எடுத்து அதன் கலர்ஃபுல் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அடுத்ததாக தன்னுடைய மகளுடன் பிகினியில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சமந்தா கமெண்ட்: இந்த புகைப்படத்தில் தன்னுடைய மகளுடன் ஒரே மாதிரியான வண்ணத்தில் பிகினியில் அவர் காணப்படுகிறார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை தெரிவித்துள்ள நிலையில், நடிகை சமந்தாவும் க்யூட்டாக உள்ளதாக கமெண்ட் செய்துள்ளார். அவர் கூறுவது போல ஹாட்டாகத்தான் இருக்கிறார் ஸ்ரேயா. 40 வயதை கடந்த நிலையிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஷ்ரேயா. பட வாய்ப்புகளை பெறும்வகையில் அடுத்தடுத்து இதுபோன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











