twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்காக வருத்தம்... ஷூட்டிங் பகுதிகள் அழிந்ததால் சமந்தா, ஹன்சிகா சோகம்!

    |

    சென்னை: நேபாள பூகம்பத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் அழிந்த நிலையில், சினிமா ஷூட்டிங் நடைபெறும் இடங்களும் அழிந்துபோன காரணத்தினால் நடிகைகள் சமந்தாவும், ஹன்சிகாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    நேபாள பூகம்பத்தில் பலத்த சேதம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கானோர் இறந்துள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியுள்ளது.

    நேபாளத்தில் படப்பிடிப்பு நடத்த உகந்த இடங்கள் நிறைய உள்ளன. ஏராளமான தமிழ் படங்களின் படப்பிடிப்புகளும் அங்கு நடந்துள்ளன. அந்த பகுதிகளில் அழிந்து தரை மட்டமாகியுள்ளது.

    10 என்றதுக்குள்ளே

    10 என்றதுக்குள்ளே

    விக்ரம், சமந்தா ஜோடியாக நடிக்கும் 10 என்றதுக்குக்குள்ள என்ற படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் நேபாளத்தில் நடந்தது. விக்ரம், சமந்தா இருவரும் நேபாளத்தில் பல நாட்கள் முகாமிட்டு இதில் நடித்தார்கள்.

    சமந்தாவின் வருத்தம்

    சமந்தாவின் வருத்தம்

    பூகம்பத்தில் 10 என்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்களும் சேதமடைந்து விட்டன. இது சமந்தாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பூகம்ப சேதம் படம் போட்டு

    பூகம்ப சேதம் படம் போட்டு

    சமூக வலை தளத்தில் நேபாள பூகம்ப சேத படங்களை வெளியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறும் போது நேபாளத்தில் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படப்பிடிப்பு நடந்தது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அந்த பகுதிகள் நில நடுக்கத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. இதை கேள்விப்பட்டதும் நான் அதிர்ச்சியானேன்.

    இதயம் நொறுங்குகிறது

    இதயம் நொறுங்குகிறது

    நாங்கள் படப்பிடிப்பு நடத்திய காத்மாண்டு மற்றும் பக்தாபூர் ஆகிய இடங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதையெல்லாம் செய்திகளில் பார்க்கும் போது என் இதயம் நொறுங்குவது போல் இருக்கிறது என்றார்.

    ஹன்சிகாவும் சோகம்

    ஹன்சிகாவும் சோகம்

    மேலும் பல நடிகைகள் நேபாள பூகம்ப சேதத்துக்கு அனுதாபம் வெளியிட்டு உள்ளனர். ஹன்சிகா கூறும் போது நேபாள பூகம்ப பாதிப்பில் இருந்து அங்குள்ள மக்கள் மீள பிரார்த்திக்கிறேன் என்றார். திரிஷா கூறும் போது நேபாள பூகம்ப விபத்து இதயத்தை நொறுக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress samantha and hansika prays for Nepal people and sad about the cinema shooing places destroyed in Earth quake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X