Samantha - அமெரிக்காவில் ஆண் நண்பருடன் சமந்தா.. சிகிச்சையா இல்லை ஜாலி ட்ரிப்பா?
சென்னை: Samantha (சமந்தா) மையோசிடிஸ் சிகிச்சைக்காக நடிகை சமந்தா அமெரிக்கா சென்றிருக்கிறார். அப்போது அவர் செய்த காரியம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு புஷ்பா படத்தி ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடிய சமந்தாவுக்கு மேற்கொண்டு ரசிகர் கூட்டம் பெருகியது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டாகியிருந்தார்.

மையோசிடிஸ் நோய்: இந்தச் சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அதற்கு தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஒருவழியாக மீண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அவரின் கரியரில் அது மோசமான தோல்வி படம் என்ற பெயரை பெற்றது. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருக்கிறார்.

குஷி ரிலீஸ்: சாகுந்தலம் தோல்வியை குஷி படத்தில் ஈடுகட்டலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமந்தா. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி குஷி படம் ரிலீஸாகவிருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமடைந்திருக்கிறது. சமீபத்தில்கூட குஷி படத்தின் மியூசிக்கல் கான்செர்ட்டில் விஜய் தேவரகொண்டாவுடன் ஸ்டேஜில் சமந்தா நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோயின் தாக்கம் முழுதாக விலகவில்லை என தெரிகிறது.

ஒதுங்கிய சமந்தா: நோயிலிருந்து முழுமையாக மீண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார் அவர். எனவே தான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையை மீண்டும் தயாரிப்பாளர்களிடமே கொடுத்துவிட்டார். விரைவில் நோயிலிருந்து குணமடைந்து சமந்தா ஃபுல் ஃபார்மில் வலம் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

அமெரிக்கா சென்ற சமந்தா: இந்நிலையில் நடிகை சமந்தா அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுக்க சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன. ஜிம்மில் ஒரு ஆணுடன் ஒர்க் அவுட் செய்யும்படியான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறாரா இல்லை ஜாலி ட்ரிப் அடித்திருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











