ஓ பேபி.. சட்டென சம்பளத்தை உயர்த்திய சமந்தா... இப்ப எத்தனை கோடி வாங்குறாங்க தெரியுமா?

நடிகை சமந்தா தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகை சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பானா காத்தாடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா, இன்று தமிழ், தெலுங்கு, கன்னடா என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். சென்னை பல்லாவரத்து பெண்ணான சமந்தா இப்போது ஆந்திர மருமகளாகிவிட்டாலும், தமிழ் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தாவுக்கு, அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கின்றனர். இதனால் தனது சம்பளத்தை அவர் உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளத்தை உயர்த்திய சமந்தா

சம்பளத்தை உயர்த்திய சமந்தா

பொதுவாக ஹீரோவாக இருந்தாலும் சரி, ஹீரோயினாக இருந்தாலும் சரி ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த படத்தில் இருந்து சம்பளத்தை உயர்த்திவிடுவர். அப்படி தான் தெலுங்கு படமான 'ஓ பேபி' ஹிட்டானதை தொடர்ந்து சமந்தாவும் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். இதுவரை ரூ.2 கோடி சம்பளவம் வாங்கி வந்த சமந்தா, அதை தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தி இருக்கிறார் என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

நயன்தாராவின் சம்பளம்

நயன்தாராவின் சம்பளம்

சமந்தாவின் இந்த அறிவிப்பின் மூலம் திருமணத்துக்கு பிறகும் தன்னுடைய மார்க்கெட் குறையவில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். ரூ.3 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியதன் மூலம் டாப்சியை மிஞ்சியிருக்கிறார் சமந்தா. ஏனெனில் டாப்சி இப்போது ரூ.2.5 கோடி தான் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தாண்டுவது சமந்தாவுக்கு கடினம் தான். அவர் தற்போது ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது கங்கனா ரனாவத் தான். ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் ரூ.14 கோடி. இதனால் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அவர்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

கங்கனாவுக்கு அடுத்தப்படியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இருப்பது தீபிகா படுகோனே. ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் ரூ.13 கோடி என கூறப்படுகிறது. ஆனால் ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை ஒப்பிடும் போது ஹீரோயின்களின் சம்பளம் குறைவு தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X