Samantha: நாக சைத்தன்யா -சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்.. ட்ரெண்டிங்கில் சமந்தா!

ஐதராபாத்: நடிகர் நாக சைத்தன்யா -ஷோபிதா துலிபாலா இருவருக்கும் இன்றைய தினம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நாக சைத்தன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் சமந்தா ரசிகர்கள் கடுப்பில் காணப்படுகின்றனர்.

நாக சைத்தன்யா -ஷோபிதா துலிபாலா நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து சமந்தா தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளார். சமந்தா இதயம் நொறுங்கிய நிலையில் காணப்படுவதாக ரசிகர்கள் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் சமந்தா நடித்த திரைப்படங்களின் வீடியோ காட்சிகளை இணைத்து கொடுத்து வருகின்றனர்.

Samantha Naga Chaitanya

நாக சைத்தன்யா -ஷோபிதா துலிபாலா: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று காலை 9 மணி அளவில் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து முன்னதாக தீயென தகவல்கள் பரவிய நிலையில் மதியம் ஒரு மணியளவில் இந்த தகவலை நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் என்றாலும் இவர்களின் இந்த நிச்சயதார்த்தம் டோலிவுட்டில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

நடிகை சமந்தா: இந்நிலையில் தன்னுடைய தந்தையைப் போலவே தற்போது நாக சைத்தன்யாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சமந்தா உடனான பிரிவிற்கும் நாக சைத்தன்யா -சோபிதாவின் காதல்தான் காரணம் என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாக சைத்தன்யா. ஆனால் இவர்களது திருமணம் 4 ஆண்டுகள் நீடித்த நிலையில் கடந்த இந்த 2021ம் ஆண்டில் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர்.

ட்ரெண்டிங்கில் சமந்தா: இதையடுத்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, தற்போது மலையாளம் உள்ளிட்ட அடுத்தடுத்த மொழிப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களாக வெறும் வதந்திகளாகவே வலம்வந்த நாக சைத்தன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் காதல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என்ற தகவலும் வெளியான நிலையில் இந்த நிச்சயதார்த்தத்தை நாகார்ஜுனா உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களது நிச்சயதார்த்தத்தையடுத்து நடிகை சமந்தா தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் காணப்படுகிறார்.

ரசிகர்கள் கேள்வி: சமந்தாவின் முந்தைய படங்களில் இருந்து பல வீடியோ கிளிப்பிங்குகளை எடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமந்தா தற்போது இதயம் நொறுங்கிய நிலையில் உள்ளதாகவும் அடுத்தடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக நாக சைத்தன்யா -சமந்தா ஜோடி மிகவும் சிறப்பான ஜோடியாக பார்க்கப்பட்ட நிலையில் இவர்களது பிரிவு அவர்களது ரசிகர்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது நாக சைத்தன்யாவின் நிச்சயதார்த்தம், சமந்தா ரசிகர்களை மேலும் கடுப்பிற்குள்ளாக்கியுள்ளது. இதே போல நாக சைத்தன்யா சிங்கிளாக இருக்கும்போது சமந்தா தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்தால் எப்படிப்பட்ட கமெண்ட்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X