Samantha :சிட்டாடல் பிரீமியர் ஷோவில் சமந்தா.. அவர் அணிந்திருந்த ஆடையோட விலை என்ன தெரியுமா?
சென்னை : நடிகை சமந்தாவின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளது.
அடுத்ததாக சமந்தா -விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகிவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார்.

சிட்டாடல் பிரீமியர் ஷோவில் சமந்தா : நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர். அவரது திருமணம், விவாகரத்து, அரியவகை நோய் பாதிப்பு என எதுவுமே தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் அவர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். தற்போது தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள சமந்தா, அடுத்தடுத்து படங்கள், பிரமோஷன்கள் என தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் சாகுந்தலம் படத்திற்காக ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் சிறப்பான படக்குழுவினருடன் இணைந்து சிறப்பான பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தார் சமந்தா. குறிப்பாக ஐதராபாத்தில் இவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருந்தனர். கேரளாவில் பிரமோஷனில் ஈடுபட்ட சமந்தா, நேரடி மலையாளப்படங்களில் நடிக்கும் தன்னுடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் சமந்தா, இந்நிலையில் நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்ற சிட்டாடல் வெப் தொடரின் பிரீமியர் ஷோவில் நேற்றைய தினம் கலந்துக் கொண்டார். ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ளது இந்தப் படம். இந்த ஷோவிற்காக மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார் சமந்தா. அழகான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த உடைக்கு பொருத்தமான சில்வர் நகைகளையும் அணிந்து காம்பினேஷன் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த உடையின் விலை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. கருப்பு நிறத்தில் மாடர்னாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடை ஏறக்குறைய 68,000 ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் நடிகர் வருண் தவான், பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன், நிக் ஜோனாஸ், ரூசோ சகோதரர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். சமந்தாவை போலவே வருண் தவானும் கருப்பு நிற அவுட்பிட்டில் கலந்துக் கொண்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கருப்பு நிற உடைகளில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தனியாகவும் வருண் தவானுடன் இணைந்தும் சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றன. முன்னதாக சாகுந்தலம் படத்தின் பிரமோஷன்களில் அதிகமாக கலந்துக் கொண்ட சமந்தாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து அவரால் திட்டமிட்டபடி பிரமோஷன்களில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது சிட்டாடல் பிரீமியர் ஷோவிற்காக லண்டன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











