இலைகளின் நடுவே ஒரு பெளர்ணமி... சமந்தாவின் அட்டகாசமான பிக்ஸ் !

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு என சுழன்று சுழன்று நடித்து இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.

தமிழில் சீமராஜா திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து முதன்முறையாக "காத்துவாக்குல ரெண்டு காதல் " என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரானா காலத்தில் பல்வேறு சேலஞ்ச்களை செய்து காட்டி அசத்தி வந்த சமந்தா இப்பொழுது இலைகளின் நடுவே பெளர்ணமி தோன்றியது போல இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக

தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலருக்கும் பரிச்சயமான இவர் அதை தொடர்ந்து, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து அமர்க்களப்படுத்தி இருந்தார்.

முன்னணி நடிகையாக

முன்னணி நடிகையாக

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல வெற்றி படங்களை இன்றுவரை கொடுத்துக் கொண்டிருக்கும் சமந்தாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்க இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

தமிழில் சிவகார்த்திகேயன் உடன் நடித்த சீமராஜா திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக இணைந்து நடித்து வரும் "காத்துவாக்குல ரெண்டு காதல் " திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பாராட்டுகளையும் பெற்று

பாராட்டுகளையும் பெற்று

கொரானா காலத்திலும் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்க பல்வேறு சேலஞ்ச்களை செய்து காட்டி அசத்தி வரும் சமந்தா அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்தார்.

மந்திரப் பார்வையால்

மந்திரப் பார்வையால்

இந்நிலையில் இப்பொழுது இலைகளுக்கு நடுவே பெளர்ணமி நிலா தோன்றியது போல மயக்கும் மந்திரப் பார்வையால் அனைவரையும் மயங்க வைத்திருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் பாடகி சின்மயி மற்றும் நடிகை விமலா ராமன் தங்களது பாணியில் இதயங்களை போட்டு சமந்தாவை ஏகபோகமாக வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X