Actress Samantha: உலகமகா கவர்ச்சிடா சாமி.. சமந்தா புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொல்ஸ்!

சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சமந்தா. முன்னதாக ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது இந்த சீரிஸைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்திய பதிப்பிலும் வருண் தவானுடன் இணைந்து நடித்து முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாக சைத்தன்யாவுடனான தன்னுடைய பிரிவு குறித்த அறிவிப்பை மேற்கொண்ட சமந்தா அடுத்ததாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சில மாத காலங்களாக சமந்தா நடிக்காமல் உள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தயாராகி வருகிறார். இதையொட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் காட்டுக்கு நடுவில் இருந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் தள்ளினார் சமந்தா. சிலர் இது தேவையா என்றும் கமெண்ட் செய்திருந்தனர். தொடர்ந்து கவர்ச்சிக்காடாக அடுத்தடுத்து போட்டோ சூட் எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Actress Samantha latest photoshoot for famous magazine


நடிகை சமந்தா: நடிகை சமந்தா பல ஆண்டுகளைக் கடந்து தமிழ், தெலுங்கு படங்களில் விஜய். சூர்யா. விக்ரம் உள்ளிட்ட பலருடன் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பாலிவுட்டில் சமந்தாவிற்கு பெற்றுக் கொடுத்தது. மேலும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்திலேயே சிட்டாடல் இந்திய பதிப்பின் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா, தான் ஏற்கும் கேரக்டர்களை அந்த கேரக்டர்களின் சிறப்பை கவனத்தில் கொண்டு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கேரக்டராகவே மாறிவிடும் குணம் சமந்தாவிற்கு உள்ளது.

Actress Samantha latest photoshoot for famous magazine


வெற்றிப்படங்களில் சமந்தா: அந்த வகையில் இவரது பல படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. விஜயுடன் மெர்சல், தெறி உள்ளிட்ட படங்களில் சமந்தா நடித்துள்ளார். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக பார்க்கப்பட்டது. நாகஜெயதன்யாவுடன் திருமணம் ஆன போதிலும் தன்னுடைய மார்க்கெட் வேல்யூ சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டார் சமந்தா. தொடர்ந்து அவருடனான பிரிவு அறிவிப்பிற்குப் பிறகும் சமந்தாவின் மார்க்கெட் மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தினார். யசோதா, சாகுந்தலம், குஷி என அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் ரிலீசாகின.

Actress Samantha latest photoshoot for famous magazine


படங்களில் நடிக்காத சமந்தா: சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதிலிருந்து மீள்வதற்காகவும் சில சிகிச்சைகளை தொடர்வதற்காகவும் அவர் சில மாத காலங்களாக நடிக்காமல் உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நலன் தற்போது தேறி உள்ளதாகவும் மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். சமந்தா நடிக்காமல் கடந்த சில மாதங்களாக இருந்த போதிலும் தன்னுடைய பிட்னஸ் வீடியோக்கள், போட்டோசூட் புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பதிவிட்டு தன்னுடைய instagram ரசிகர்களை மிகவும் குஷியாக வைத்திருந்தார்.

Actress Samantha latest photoshoot for famous magazine


லேட்டஸ்ட் போட்டோஷுட்: இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடுக்காட்டில் நீச்சல் உடையில் இருக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்நிலையில் தற்போது சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை மிக அதிகமான அளவில் கவர்ந்து வருகிறது. பிரபல இதழிற்காக அவர் இந்த போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ளார். வித்தியாசமான உடைகளில் சமந்தா இந்த புகைப்படங்களில் காணப்படுகிறார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் அதிகமான லைக்ஸ்களை அள்ளி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X