Samantha: ஒருவருட நடிப்பு இடைவெளி.. சமந்தா எவ்வளவு கோடிகளை இழக்குறாங்க தெரியுமா?

சென்னை: நடிகை சமந்தா ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக தொடர்ந்து பல வருடங்களாக திரைத்துறையில் பயணம் செய்து வருபவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப்படங்களில் நடித்து, பான் இந்தியா ஸ்டாராகவும் மாறியுள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி வருகின்றன.

Actress Samantha loses crores in her break in Cinema

அடுத்தடுத்த பிரச்சினைகளால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிய நிலையிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்து தொடர்ந்து சினிமாவில் வெற்றி நாயகியாக வலம்வருகிறார் சமந்தா.

ஒருவருட நடிப்பு இடைவெளியில் சமந்தா இழக்கும் கோடிகள்: தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ள சமந்தாவிற்கு இந்தியில் தி பேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. பான் இந்தியா நாயகியாக சமந்தா மாறியதற்கு இந்த தொடரும் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

Actress Samantha loses crores in her break in Cinema

இதையடுத்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரிலும் நடித்துள்ளார் சமந்தா. இந்தத் தொடரையும் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். இதன் சூட்டிங்கை முடித்துள்ள சமந்தா, தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். முதலில் ஒரு ஆண்டுகாலம் இந்த ஓய்வு இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 6 மாத காலம் என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அமெரிக்கா செல்லவுள்ள சமந்தா, தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கவுள்ளார்.

அடுத்ததாக சமந்தா -விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், தற்போது கோவை ஈஷா யோகா மையத்தில் சமந்தா தன்னுடைய பொழுதை சிறப்பாக கழித்து வருகிறார். விரைவில் அவர் அமெரிக்க பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actress Samantha loses crores in her break in Cinema

இந்த ஓய்வு காலத்தில் சமந்தா ஆன்மீகம் உள்ளிட்ட வழிகளில் தன்னுடைய மனதை செம்மைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஒரு வருடத்தில் படங்களில் நடிக்காததால் சமந்தாவிற்கு 12 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் நடிக்க சமந்தா 3.5 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார். இதையடுத்து அவருக்கு அடுத்த ஒரு ஆண்டில் ஏற்படும் இழப்பை தவிர்க்க முடியாது.

மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பிற்கு உள்ளாகி ஒரு ஆண்டு ஆனதாக சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் சமந்தா. இந்த நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், சில மாதங்களிலேயே அதிலிருந்து வெளியில் வந்து குஷி, சிட்டாடல் ஆகியவற்றின் சூட்டிங்கிலும் யசோதா, சாகுந்தலம் படங்களின் பிரமோஷன்களிலும் தன்னை பிசியாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது இந்த மன தைரியம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X