அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !

ஹைதராபாத் : தென்னிந்தியாவை தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டிலும் தனது கதடத்தை பதித்து வருகிறார் நடிகை சமந்தா.

லாக் டவுனில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த சமந்தா இப்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்தியில் நடித்து வரும் தி ஃபேமிலி மேன் 2 ப்ரமோஷனுக்காக எடுத்த போட்டோக்களில் பேண்ட்டை திருப்பிப்போட்டுள்ள சமந்தா ரசிகர்களால் பங்கமாக கலக்கப்பட்டு வருகிறது.

வரவேற்பை பெறவில்லை

வரவேற்பை பெறவில்லை

விஜய் சேதுபதியின் 96 திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கில் இந்த திரைப்படம் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து கலக்கி இருப்பார். தமிழில் வரவேற்பை பெற்ற அளவுக்கு தெலுங்கில் பெறவில்லை என்றாலும் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

கைவசம் உள்ளது

கைவசம் உள்ளது

பல மாதங்களாக கொரானா அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருந்ததால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் இருக்க புதிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த சமந்தா இப்போது அடுத்தடுத்து திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வர, விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் பாலிவுட்டில் முதல் முறையாக கால் பதிக்கும் தி ஃபேமிலி மேன் 2 என சமந்தாவின் கைவசம் உள்ளது.

நெகட்டிவ் கதாபாத்திரத்திரம்

நெகட்டிவ் கதாபாத்திரத்திரம்

இதுவரை ரசிகர்களை தனது க்யூட்டான நடிப்பின் மூலம் கவர்ந்து வந்த இவர் தி ஃபேமிலி மேன் 2ல் வில்லியாக நடிக்க இருக்கும் செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ள நிலையில், நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் அனைவரையும் கவர்ந்திழுப்பார் என நம்பப்படுகிறது.

ப்ரமோஷனுக்காக

ப்ரமோஷனுக்காக

நடிகை சமந்தாவை சோசியல் மீடியா குயின் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு போட்டோஷூட்களிலும் திரைப்படங்களிலும் செம ஸ்டைலில் கச்சிதமாக பொருந்துவார். விரைவில் தி ஃபேமிலி மேன் 2 வெளியாக இருக்கும் நிலையில் அதன் ப்ரமோஷனுக்காக விதவிதமான காஸ்ட்யூம்களில் போட்டோஷூட் நடத்திவந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் அதில் ஒரு காஸ்டியூமில் ஹை ஹீல்ஸில் வித்தியாசமான சட்டையில் பேண்ட்டை திருப்பிப் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் சமந்தாவைப் பார்த்த ரசிகர்கள் "பேண்ட்ட திருப்பிப் போட்டா அதுக்கு பேரு ஃபேஷனா" என சிலர் கலாய்த்து வர, பெண்கள் பலரும் இந்த பேஷன் நல்லா இருக்கே என சமந்தாவை பின்தொடர்ந்து பேண்ட்டை திருப்பிப் போட தயாராகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X