Actress Samantha: கையில் டிரிப்ஸ்.. கலக்கல் போட்டோஷுட்டிற்கு தயாரான சமந்தா!
சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் வெப் தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தியிலும் தி பேமிலி மேன் 2 உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்து அதிரடி கிளப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார். தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பு காரணமாக நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துள்ளார்.
இருந்த போதிலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்த வொர்க் அவுட் வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்களையும் பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய படங்களை இன்ஸ்டாகிராமில் போட்டு ஏராளமான ஃபாலோயர்களை பெற்று வருகிறார். அடுத்தடுத்த ரசிகர்களை கவர்ந்துவரும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் 31.6 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

நடிகை சமந்தா: தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா தொடர்ந்து பாலிவுட்டிலும் தி பேமிலி மேன் 2, சிட்டாடல் என அடுத்தடுத்த வெப் தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவரானார். தொடர்ந்து திருமணம், விவாகரத்து, அரியவகை நோய் பாதிப்பு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவகையில் பார்த்துக்கொண்டார் சமந்தா. தற்போது தன்னுடைய நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.
சமந்தாவின் குஷி படம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்து வெளியான குஷி படம் சிறப்பாக அமைந்தது. ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்ததாக படம் வெளியாகவில்லை. தற்போது நடிக்காமல் சிகிச்சை பெற்றுவரும் சமந்தா, சமூக வலைதளங்களில் இருந்து விலகாமல் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 31.6 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். அவர்களை திருப்திப்படுத்தும்வகையில் அடுத்தடுத்து பிட்னஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய சிகிச்சை குறித்த புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்துவரும் சமந்தா தற்போது, கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி போட்டோஷுட் குறித்து டிஸ்கஷன் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து சமந்தாவின் போட்டோஷுட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமான ஷேரிங்கையும் பெற்று வருகிறது.
கலக்கல் போட்டோஷுட்: தங்க நிறம், கருப்பு நிறம் என அடுத்தடுத்த வித்தியாசமான மற்றும் ட்ரெண்டியான உடைகளில் சமந்தா போட்டோஷுட் எடுத்து அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி ஒரு நாள்கூட நிறைவடையாத நிலையில் லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் ஏராளமான கமெண்ட்களையும் பெற்றுள்ளது. முன்னதாக புத்தாண்டு, சங்கராந்தி உள்ளிட்டவற்றிற்கான வாழ்த்துக்களையும் சமந்தா தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











