கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை உடைக்காது... சமந்தா காட்டம்

சென்னை : நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்துள்ளார்.

Recommended Video

Samantha Nagachaitanya பிரிவுக்கு Preetham தான் காரணமா? | வைரலாகும் அதிர்ச்சி தகவல்

இவர்களது விவாகரத்து குறித்து பல்வேறு வதந்திகள், யூகங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்த வதந்திகள் எதுவும் தன்னை உடைக்காது என்று சமந்தா காட்டமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2017ல் அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையிலும் தொடர்ந்து படங்களில் அவர் நடித்து வந்தார். விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் அவர் நடித்தார்.

சமந்தா -நாக சைத்தன்யா விவாகரத்து

சமந்தா -நாக சைத்தன்யா விவாகரத்து

இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் கடந்த வாரத்தில் தங்களது விவாகரத்து முடிவை வெளியிட்டனர். இந்த முடிவு துரதிர்ஷ்டமானது என்று நாக சைத்தன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா வருத்தம் தெரிவித்துள்ளார். இவர்களை சேர்க்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

தொடரும் வதந்திகள்

தொடரும் வதந்திகள்

இவர்களது விவாகரத்து முடிவு பல்வேறு யூகங்களையும் வதந்திகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும்வகையில் தற்போது சமந்தா புதிய ட்வீட் ஒன்றை பதிந்துள்ளார். தனக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளில் இருந்து தன்னை பாதுகாக்கும் அனைவருக்கும் அவர் அதில் நன்றி தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு வதந்தி

கருக்கலைப்பு வதந்தி

தனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, தான் குழந்தை பெற மறுப்பு தெரிவித்தேன் மற்றும் கருவை கலைத்தேன் என்ற வதந்திகள் குறித்து அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து மிகுந்த வலியை அளித்துள்ளதாகவும் அதிலிருந்து மீள்வதற்கு தனக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

உடைந்துவிட மாட்டேன்

உடைந்துவிட மாட்டேன்

மேலும் இத்தகைய தாக்குதல்களில் இருந்து தான் தன்னை பாதுகாத்துக் கொள்வேன் என்றும் உடைந்து விட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதை தன்னுடைய நலம் விரும்பிகளுக்கு உறுதியளிக்கும் வகையில் அவர் கூறியுள்ளார். இந்த காட்டமான பதிவு அவர் இந்த வதந்திகளால் எவ்வாறு வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பதை காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X