Actress Samantha: என்னோட உடலுக்கும் மனதுக்கும் நான் பிரேக் கொடுத்ததே இல்லை.. சமந்தா ஓபன்!
சென்னை: தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக பல ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சமந்தா. கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பான மயோசிட்டிஸ் நோய்க்காக அவர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதில் இருந்து அவர் விலகியிருந்தார். ஆயினும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விஜய்தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த குஷி படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
அடுத்ததாக வருண் தவானுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிப்பும் ரிலீசாகவுள்ளது. இந்த தொடரை முன்னதாக சமந்தாவின் தி பேமிலி மேன் 2 வெப் தொடரை இயக்கியிருந்த ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இந்த தொடர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நோய் பாதிப்பிற்காக சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாகவே காணப்பட்டார். சமந்தா. அடுத்தடுத்து பிட்னஸ் வீடியோக்கள், போட்டோசூட் வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தி வந்தார்.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பல ஆண்டுகாலங்களாக கட்டிப் போட்டு வருகிறார். தன்னுடைய க்யூட்னஸ் மற்றும் அழகு காரணமாக தான் நடிக்கும் படங்களின் கேரக்டர்களுக்கு மிகச் சிறப்பான வடிவத்தை கொடுத்து வருபவர் சமந்தா. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதுடன் கவர்ச்சி நாயகியாகவும் காணப்படும் சமந்தாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆயினும் சமந்தாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்கவில்லை.
மீண்டும் நடிக்க தயாரான சமந்தா: நாக சைத்தன்ன்யாவுடன் பிரிவு அறிவிப்பு, மயோடிசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் சமந்தா பாதிக்கப்பட்ட நிலையில் பொதுவெளியிலும் பல்வேறு சர்ச்சைகளையும் அவர் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பு காரணமாக எதிர்கொண்டார். இந்நிலையில் சில மாதங்களாக சினிமாவில் இருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இவரது instagram பக்கம் அடுத்தடுத்து கவர்ச்சி படங்களால் நிரம்பியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி காட்டினார் சமந்தா.
அடுத்தடுத்த போட்டோஷுட்கள்: தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் வித்தியாசமான பின்புலங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. சினிமாவில் நடிக்காமல் ஓய்வு எடுத்த போதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த குஷி படம் வெளியாகி மிகச் சிறப்பான ஹிட் கொடுத்தது. இதனிடையே பாலிவுட்டில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இவர்கள் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த தி பேமிலி மேன் 2 படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சமந்தா இன்டர்வியூ: இதனிடையே படங்களில் நடிப்பதற்காக அடுத்தடுத்த போட்டோ சூட்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. மேலும் முன்னணி மீடியாக்களில் அவர் இன்டர்வியூவும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய இன்டர்வியூவில் தான் எப்போதுமே தன்னுடைய உடலுக்கும் மனதுக்கும் முழுமையான ஓய்வு கொடுத்ததில்லை என்றும் தினந்தோறும் ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்கும் தான், ஏழுமணி நேரம் தூங்குபவர்களை பார்த்து சோம்பேறியா என்று கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய உடலுக்கும் மனதுக்கும் போதிய ஓய்வை தான் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவீத்துள்ளார்.
சமந்தா சந்தித்த அழுத்தம்: இதனிடையே தன்னுடைய மயோசிட்டிஸ் நோய் குறித்த தகவலை தான் வெளியிடும் வகையில் தனக்கு அழுத்தம் தரப்பட்டதாகவும் அவர் மற்றொரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.தான் நாயகி தொடர்பான படம் ஒன்றில் நடித்திருந்த நிலையில் படத்தின் பிரமோஷன்களில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் ஆனால் தயாரிப்பு தரப்பு தான் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தன் மீதான அதிகப்படியான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தது தனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் தான் தன்னுடைய மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து Sympathy Queen என்று தன்னை மற்றவர்கள் விமர்சித்ததையும் சமந்தா சுட்டி காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











