சமந்தா எதிர்பார்க்காதது நடந்துருக்காம்... அவங்க சொல்றத கேளுங்க!

சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா அவருடன் இணைந்து நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றாலும் விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து தற்போது சமந்தா தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

புஷ்பா படம்

புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பான வசூல் சாதனை புரிந்தது.

 தேவிஸ்ரீ பிரசாத் இசை

தேவிஸ்ரீ பிரசாத் இசை

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. பல நடிகர்கள் இந்த படத்தின் பாடல்களை டிக் டாக் வீடியோக்களாக பதிவிட்டு தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

ஊ சொல்றியா மாமா பாடல்

ஊ சொல்றியா மாமா பாடல்

இந்த வீடியோக்களும் படத்தின் பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத்தந்தது. படத்தில் ஸ்ரீ வள்ளி மற்றும் ஏ சாமி பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

சர்ச்சைக்குள்ளான பாடல்

சர்ச்சைக்குள்ளான பாடல்

இந்த பாடல் வெளியாவதற்கு முன்பே சமந்தாவின் நடனம் குறித்த சர்ச்சைகளும் இருந்தது. இந்த படத்தில் ஒரு பாட்டிற்கு அவர் ஆட்டம் போட்டு இருந்தார். கவர்ச்சியான அவரது நடனம் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக அவரது விவாகரத்து குறித்த சர்ச்சைகளும் இருந்த நிலையில் தொடர்ந்து இந்த பாடலுக்கு அவர் ஆட்டம் போட்டது அனைவரையும் விமர்சனம் செய்ய வழியை ஏற்படுத்தி இருந்தது.

பாடல் குறித்து சமந்தா

பாடல் குறித்து சமந்தா

ஆனால் இது பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்ளாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி சமந்தா நடித்து வந்தார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் ரிலீசாக உள்ளன. இந்நிலையில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கான வரவேற்பு குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.

எதிர்பார்க்காத வரவேற்பு

எதிர்பார்க்காத வரவேற்பு

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் இந்தப் பாடலின் வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்திய அளவில் இந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தான் எதிர்பார்க்காத ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X