Samantha: கடந்த காலத்தில் நான் தெரியாமல் செய்த தவறு.. மனம் திறந்த சமந்தா!

சென்னை: தென்னிந்திய நடிகைகளில் திருமணத்திற்கு பின்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொண்டு தனது அழகாலும் திறமையாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்து இருக்கிறார் நடிகை சமந்தா. அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, பிட்னஸ் பயிற்சியாளருடன் இணைந்த ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தை பேசி வருகிறார்.

அழகான தமிழ் பேசத் தெரிந்த நடிகையான சமந்தா, தமிழ்,தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கு என்று தனி ரசிகர்களை வைத்து இருக்கிறார். இவர் நாகார்ஜூனின் மகன் நாகசைத்தன்யாவை காலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். ஜீவனாம்சமாக பணம் கொடுக்க நாகசைத்தன்யா முயன்ற போதும், அந்த பணத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டு தனியாக உறுதியான பெண்ணாக இருக்கிறார்.

Samantha citadel

நடிகை சமந்தா: விவாகரத்திற்கு பின் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கிய சமந்தாவின் கேரியர் அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, புஷ்பா படத்தில் ஒரே பாடலுக்கு ஆட்டம் போட்டு புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து சமந்தாவின் நடிப்பில் கதாநாயகியை மையப்படுத்தி யாசோதா, சாகுந்தலம் போன்ற படங்கள் வெளியாகின. ஆனால், அந்த படங்கள் எதுவும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்தார் அந்த படம் சுமாராக ஓடியது.

சிட்டாடல்: தற்போது சமந்தா ஹாலிவுட்டிட் ரூஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாட்டல்சீரிஸின் தலைப்பில் இந்தியன் சீரிஸில் நடித்துள்ளார். வருண் தவானுடன் இணைந்து ஸ்பை ஏஜென்ட்டாக நடித்துள்ளார். மிரட்டலான இந்த வெப் தொடரில், கே.கே.மேனன், சிம்ரன், சோஹம் மஜுமதர், ஷிவன்கிட் பரிஹர்,கஷ்வி மஜ்முந்தர், சிகந்தர் கேர் ஆகியோர் நடித்துள்ளனர். இது அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

ஒரு வருட ஓய்வு: மயோசைட்டிஸ் என்னும் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, உடற்பயிற்சி மற்றும் திரைப்படங்கள் என்று தன்னைத்தானே பிசியாக வைத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் சிகிச்சையின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர், அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதற்கு முன்பாக ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானம் செய்தார். ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கும் சமந்தா, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து பேசி வருகிறார்.

அது தெரியாமல் செய்த தவறு: ஆரோக்கியமற்ற பிராண்ட் ஒன்றில் விளம்பர தூதராக இருந்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான். ஆனால் அந்த தவறை நான் வேண்டும் என்றே செய்யவில்லை. அது தெரியாமல் செய்த தவறு. ஆனால், உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்போடு இருக்கிறேன் என்று பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X