Actress Samantha: தன்னுடைய மார்னிங் ரொட்டீனை பகிர்ந்த சமந்தா.. இவ்வளவு விஷயங்கள் பண்றாங்களா!
சென்னை: நடிகை சமந்தாவின் பிட்னஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது/ கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி தன்னுடைய உடல் நலன் மற்றும் மனநலனுக்காக ஓய்வு எடுத்து வந்த சமந்தா. தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தயாராகியுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படும் சமந்தா. தற்போது தன்னுடைய மார்னிங் ரொட்டீன் குறித்த பேட்டியை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
காலை ஐந்து முப்பது மணிக்கு எழுந்து கொள்ளும் பழக்கம் உடையவர் சமந்தா. இதையடுத்து நன்றி தெரிவிக்கும் ஜெர்னலை எழுதுவேன் என்றும் தொடர்ந்து மெடிடேஷன் உள்ளிட்டவற்றை செய்வேன் என்றும் சமந்தா கூறியுள்ளது இளைய தலைமுறைக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா 10 ஆண்டுகளை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடர்களிலும் இவரை காண முடிகிறது. அந்த வகையில் சமந்தா முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. சொந்த வாழ்க்கையிலும் திரை வாழ்க்கையிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார் சமந்தா. நாக சைத்தன்யாவுடனான பிரிவு, அதையொட்டிய விமர்சனங்கள், அரிய வகை நோய் பாதிப்பு, அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக திரைப்படங்களில் நடிக்காமல் இடைவெளி எடுத்தது என சமந்தா அடுத்தடுத்து முக்கியமான முடிவுகளை பிரச்சனைகளை சந்தித்தார்.
சமந்தாவின் முடிவு: இந்நிலையில் தற்போது தன்னுடைய உடல் நலன் மற்றும் மன நலனை பாதுகாத்து மீண்டும் படங்களில் நடிக்கும் முடிவை சமந்தா எடுத்துள்ளார். இதை எடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் சமந்தா நடிக்கும் படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள சிட்டாடல் வெப் தொடர் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வருண் தவானுடன் இணைந்து சமந்தா நடித்துள்ளார்.
சமந்தா மார்னிங் ரொட்டீன்: முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி ஃபேமிலி மேன் 2 படத்தை இயக்கிய ராஜ் மற்றும் டிகே சிட்டாடல் வெப் தொடரையும் இயக்கியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் சமந்தா பல போட்டோ சூட் புகைப்படங்கள், ஒர்க் அவுட் வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் என அடுத்தடுத்த பதிவுகளை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் சமந்தா தனது மார்னிங் ரொட்டீனை தற்போது பேட்டியாக வெளியிட்டுள்ளார். இதில் தான் தினந்தோறும் காலை 5:30 மணிக்கு எழுந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த நல்ல விஷயங்கள்: எழுந்தவுடன் நன்றி தெரிவிக்கும் ஜெர்னலை தான் எழுதுவேன் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து சூரிய உதயத்தில் சில நிமிடங்கள் இருப்பேன் என்றும் தொடர்ந்து பிரீத்திங் எக்சர்சைஸ் செய்துவிட்டு, 25 நிமிடங்கள் மெடிடேஷன் மட்டுமே செய்வேன் என்றும் சமந்தா கூறியுள்ளார். இதையடுத்து சமீபகாலங்களில் தான் டேப்பிங் தெரபியையும் செய்து வருவதாகவும் இதன்மூலம் தனக்கு மிகப்பெரிய அளவில் எனர்ஜி கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எப்போதுமே தன்னுடைய ஃபிட்னஸில் மிகப்பெரிய அக்கறை கொண்டவர் சமந்தா. இந்நிலையில் சமந்தாவின் பிட்னசிற்கு காரணமான அவரது மார்னிங் ரொட்டீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











