என் திட்டங்கள் அனைத்துமே நொறுங்கி விட்டன... விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா!
ஹைதராபாத் : நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
Recommended Video
கடந்த மாதத்தில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யும் முடிவை எடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய விவாகரத்து முடிவு குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சாகுந்தலம் படங்கள் உருவாகியுள்ளன.

ஃபேமிலி மேன் தொடர்
இவர் ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். இந்த தொடரில் இவரது நடிப்பு பரவலான, சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் ஒப்பந்தமானார்.

விவாகரத்து அறிவிப்பு
இதற்கிடையில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யும் முடிவை கடந்த மாதத்தில் இவர் அறிவித்திருந்தார். இருவரும் கூட்டாக இணைந்து தங்களது நான்கு ஆண்டு திருமண வாழ்க்கையை முறிக்கும் முடிவை வெளியிட்டனர்.

ரசிகர்கள் விமர்சனம்
இதையடுத்து ரசிகர்கள் அவரது இந்த முடிவை விமர்சனம் செய்தனர். அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லாதவர் என்றும், அபார்ஷன் செய்ததாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் சமந்தா.

விவாகரத்து குறித்து மனம் திறப்பு
இந்த விமர்சனங்கள் எதுவும் தன்னை பாதிக்காது என்று அவர் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது தன்னுடைய விவாகரத்து குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

நொறுங்கிப் போன திட்டங்கள்
இந்த ஆண்டு தன்னுடைய திட்டங்கள் அனைத்துமே நொறுங்கி விட்டன என்று அவர் கூறியுள்ளார். இதனால் அடுத்த ஆண்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிர்கொள்ள உள்ளதாகவும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி
தன் மீது அக்கறை செலுத்திய ரசிகர்களுக்கு அவர் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய இந்த விவகாரத்து முடிவு அவர்களுக்கு மன வேதனையை கொடுத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் மனவருத்தம்
நம்முடைய ஒரு முடிவு நமது குடும்பத்தினருக்கு மனவருத்தத்தை கொடுப்பது போலவே ரசிகர்களும் மனவருத்தம் அடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











