விவாகரத்து விவகாரம்... நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு.. பரபரக்கும் டோலிவுட்!
சென்னை: தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகள் பரவி வருவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை சமந்தா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

விவாகரத்து செய்யப்போவதாக தகவல்
இதனை தொடர்ந்து 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ்
நடிகை சமந்தா, தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் படுக்கையறை காட்சியில் நடித்தது நாக சைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட சர்ச்சையால் குடும்பத்திற்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜீவனாம்சம் ரூ.50 கோடி
மேலும் நாக சைதன்யா குடும்பத்தினருக்கு நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும் ஆனால் சமந்தா நடிப்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் இருவரும் விவாகரத்து செய்வது உறுதி என்றும் நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக 50 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆமீர்கானுக்கு கொடுத்த விருந்து
அதற்கு ஏற்றாற் போல் நடிகை சமந்தா, தனது மாமனாரான நாகார்ஜூனாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவில்லை. இதேபோல் நாகார்ஜூனா குடும்பத்தினர் பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கு கொடுத்த விருந்திலும் நடிகை சமந்தா பங்கேற்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் விவாகரத்து செய்வது உறுதி என்றும் தகவல் பரவியது.

தேவையில்லாத வதந்திகள்
ஆனால் இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம் இதுபோன்ற செய்திகளால் மிகுந்த வேதனை அடைந்ததாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்தார். இந்நிலையில், நடிகை சமந்தா தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீதிமன்றத்தை நாட உள்ளதாக
ஏற்கனவே மீடியாவின் கோர முகத்தை விளாசி ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் நடிகை சமந்தா. இந்நிலையில் தனது விவாகரத்து குறித்து தொடர்ச்சியாக வெளியாகும் தகவலால் நடிகை சமந்தா மன உளைச்சலில் இருப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்தக்கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











