Samantha: வாழ்க்கைக்கு அதுதான் தேவை.. சமந்தா பகிர்ந்த விஷயம்.. கிடைச்சுதா.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்த படங்களில் இணைய தன்னை தயார் படுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிட்டாடல் ஹனி பன்னி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்ற போதிலும் அடுத்தடுத்த தெளிவான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது வாழ்க்கையில் ஆன்மீகமும் சிறப்பாக கைக்கோர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்துவரும சமந்தா அடுத்ததாக மலையாளத்திலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள சமந்தா, ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா அடுத்தடுத்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் வெப் தொடர்களில் இவர் மிகவும் பிசியாக நடித்து வந்த நிலையில் அடுத்தடுத்து இவரது வாழ்க்கையில் பல பிரச்சினைகள் சூழ்ந்தன. நாக சைத்தன்யாவுடனான பிரிவு, மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு என பிரச்சினைகளால் மனம் நொந்துப் போயிருந்த சமந்தா, தற்போது அவற்றிலிருந்து மீண்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து வருகிறார். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதற்கும் அஞ்சமாட்டேன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் சமந்தா.
சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர்: சமீபத்தில் சமந்தாவின் நடிப்பில் பாலிவுட்டில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவின் உருவாக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெளியான நிலையில், இந்த தொடரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சமந்தாவை பார்க்க முடிந்தது. வருண் தவானுடன் இந்த தொடரில் அவர் நடித்திருந்தார். நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும இந்தத் தொடரில் பழையபடி சிறப்பாக சமந்தா நடித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சமந்தா இன்ஸ்டாகிராம் பதிவு: தன்னுடைய நோய் பாதிப்பிற்காக இடையில் சில மாதங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சமந்தா தற்போது மீண்டும ஃபுல் போர்சில் நடிக்கத் துவங்கியுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செய்லபட்டு வருகிறார். அவரது அடுத்தடுத்த பதிவுகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. ஆன்மீகத்திலும் அதிகமான நம்பிக்கையை சமந்தா வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள பதிவில் அடுத்தடுத்த வித்தியாசமான புகைப்படங்களை இணைத்துள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையும் தன்னுடைய புகைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
வாழ்க்கையின் தேவை: இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதாகவும் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். சாமி படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சில நேரங்களில் எதையும் செய்யாமல் ஒரு விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பதே உத்தமம் என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த பரபரப்பான உலகத்தில் அமைதியான சாதாரண வாழ்க்கைதான் அனைவருக்கும் தேவை என்று கூறியுள்ள சமந்தா, எந்தவிதமான திட்டமும் இல்லாமல் இருப்பதே சிறப்பான திட்டம்தான் என்றும் தெரிவித்துள்ளார். எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள் என்று தெரிவித்துள்ள சமந்தா, கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டத்திற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் கேள்வி: பரபரப்பான உலகில் அமைதியான வாழ்க்கைதான் அனைவருக்கும் தேவை என்று சமந்தா இந்த பதிவில் கூறியுள்ள நிலையில், அவருக்கு அந்த வாழ்க்கை கிடைத்ததா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவை மட்டுமில்லாமல் தன்னுடைய பிட்னசை காட்டும்வகையிலும் புகைப்படத்தை சமந்தா இந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











