அஜித்திடம் சமந்தா கேட்க நினைக்கும் 'ரகசியம்'... உண்மையை சொல்வாரா 'தல'!
அஜித் மற்றும் விஜய்யிடம் கேட்க நினைக்கும் கேள்வி குறித்து நடிகை சமந்தா பதில் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அஜித்திடம் தான் கேட்க நினைக்கும் ரகசியம் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆன பின்னரும் திரைப்படங்களில் ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருபவர் சமந்தார். தமிழில் அவர் நடித்த சீமராஜா, யுடர்ன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நடிகை சமந்தா பேட்டி அளித்தார். அப்போது, அஜித் மற்றும் விஜய்யிடம் கேட்க விரும்பும் கேள்வி என்ன என தொகுப்பாளர் சமந்தாவிடம் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சமந்தா, நாளுக்கு நாள் இளமையாகி கொண்டே இருப்பது எப்படி என விஜய்யிடமும், தன் கணவர் உள்பட எல்லோருக்கும் பிடித்தமானவராக இருப்பதன் ரகசியம் என்ன என அஜித்திடமும் கேட்க நினைப்பதாகக் கூறினார்.
இந்த கேள்விகளுக்கு தலயும், தளபதியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











