Samantha: ரசிகர்களுடன் கொண்டாட்டம்.. க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா!
சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தன்னை தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நாயகியாக நிலை நிறுத்தியவர். தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், இந்தியிலும் வெப் தொடர்களில் நடித்துள்ளார். டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் முன்னதாக தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் இவர் நடித்துள்ளார். இந்தத் தொடர் இயக்குநர்களுக்கு மட்டுமில்லாமல் சமந்தாவிற்கும் மிகப்பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. தொடர்ந்து இவர்கள் இயக்கத்திலேயே சிட்டாடல் வெப் தொடரில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா.
தன்னுடைய திருமணம், பிரிவு முடிவு என எதையும் தன்னுடைய கேரியரை பாதிக்க விடவில்லை சமந்தா. ஆனால் அவருக்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த சமந்தா அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த குஷி படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிப் படமாக மாறியது. இதனிடையே தன்னுடைய நோய் பாதிப்பிற்கு சிகிச்சை எடுக்கும்வகையில் கடந்த சில மாதங்களாக நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பானா காத்தாடி மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள சமந்தா, விஜய், சூர்யா, விக்ரம் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் சர்வதேச அளவில் காணப்படுகின்றனர். தன்னுடைய அழகான, ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பால் தன்னுடைய கேரக்டர்களை பேசும்படி செய்தவர் சமந்தா. நாக சைத்தன்யாவுடனான திருமணம் மற்றும் பிரிவு அறிவிப்பு என எதுவும் சமந்தாவின் கேரியரை பாதிக்கவில்லை.
அரியவகை நோய் பாதிப்பு: இதனிடையே சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அடுத்தடுத்த படங்கள் சமந்தா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. யசோதா, குஷி என அடுத்தடுத்த படங்கள் வெளியான நிலையில் நோய்க்கு தீவிர சிகிச்சை எடுக்கும்வகையில் சமந்தா கடந்த சில மாதங்களாக நடிப்பதில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக இந்தியில் சமந்தா நடிப்பில் வெளியானது தி பேமிலி மேன் 2 வெப் தொடர். ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான இந்தத் தொடர் சமந்தாவிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது.
சிட்டாடல் வெப் தொடர்: இந்நிலையில் அவர்கள் இயக்கத்திலேயே நடிகர் வருண் தவானுடன் அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. தற்போது நோய் பாதிப்பிலிருந்து தேறி மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ள சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் தொடர் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் சீசனை ராஜ் மற்றும் டீகே முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டீமுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த சமந்தா, இறுதியில் தாங்கள் பார்ப்பதற்கு கொஞ்சம் கிடைத்துள்ளது என்றும் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மலேசியாவில் சமந்தா: இந்நிலையில் மலேசியாவில் ரசிகர்களை சந்தித்த புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சமந்தா. மேலும் இந்த லுக்கிலேயே போட்டோஷுட்டையும் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மாடர்னும் டிரெடிஷனும் கலந்து இந்த லுக்கில் ரசிகர்களை வசியம் செய்துள்ளார் சமந்தா. இந்தப் புகைப்படங்கள் வெளியான ஒரே நாளில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளன. மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை தட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











