பெயருக்கு பின்னால் இருந்து அக்கினேனியை அதிரடியாக தூக்கிய சமந்தா.. காதல் கணவரை பிரிகிறாரா?

சென்னை: நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற பெயரில் உருவானது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் சமந்தா.

சிறந்த அறிமுக நடிகை

சிறந்த அறிமுக நடிகை

முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் சமந்தா. தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதேபோல் தெலுங்கில் ஷகுந்தலம் என்ற படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறார் சமந்தா.

சித்தார்த்துடன் கோவிலில் வழிபாடு

சித்தார்த்துடன் கோவிலில் வழிபாடு

நடிகை சமந்தா முதலில் நடிகர் சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இருவரும் கோவிலில் ஒன்றாக குடும்பத்துடன் பூஜை செய்த போட்டோக்களும் இணையத்தில் வெளியானது.

நாக சைதன்யாவுடன் காதல்

நாக சைதன்யாவுடன் காதல்

ஆனால் அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுடன் காதல் உறவில் இருந்தார் சமந்தா. இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். 2010ஆம் ஆண்டு வெளியான யே மாயா சேசவே என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

2017ல் நாக சைதன்யாவுடன் திருமணம்

2017ல் நாக சைதன்யாவுடன் திருமணம்

இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் ஹைத்ராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு உயர்ந்த மார்க்கெட்

திருமணத்துக்கு பிறகு உயர்ந்த மார்க்கெட்

இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பெரிய குடும்பமாக கருதப்படும் நாகார்ஜூனா அக்கினேனி குடும்பத்தில் ஒருவரான நடிகை சமந்தா. திருமணத்துக்கு பிறகு சமந்தாவின் சினிமா கிராஃப் எகிறியுள்ளது. இதனிடையே நடிகை சமந்தாவுக்கு மாமனார் வீட்டுடன் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்படுவதாக தகவல் பரவி வருகிறது. அக்கினேனி குடும்பத்தில் நடைபெறும் பல விசேஷங்களில் பங்கேற்காமல் நடிகை சமந்தா புறக்கணித்து வருவதாக தகவல் வெளியானது.

அக்கினேனியை நீக்கிய சமந்தா

அக்கினேனியை நீக்கிய சமந்தா

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை அதிரடியாக நீக்கியுள்ளார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பெயருக்கு பின்னால் இருந்த தனது மாமனார் குடும்பத்து பெயரான 'அக்கினேனி'யை நடிகை சமந்தா.. நீக்கியுள்ளார்.

காதல் கணவரை பிரிகிறாரா சமந்தா?

காதல் கணவரை பிரிகிறாரா சமந்தா?

இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கும் அவரது மாமனார் குடும்பத்திற்கும் அவருக்கும் இடையே பிரச்சனையா என கேட்டு வருகின்றனர். மேலும் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா பிரிய போகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Recommended Video

நாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு!
S என்று மாறிய பெயர்

S என்று மாறிய பெயர்

சமந்தா தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா கணக்குகளில் தனது பெயரை S என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யா 2021 புத்தாண்டை கோவாவில் செலிபிரேட் செய்தனர். அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து லைக்ஸை குவித்தனர்.

சரியான முறையில் தான் செல்கிறதா?

சரியான முறையில் தான் செல்கிறதா?

இந்நிலையில் சமந்தா தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரை நீக்கியிருப்பது அவர்களின் உறவு சரியான முறையில் தான் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X