கோவமான சமந்தா … ஏன் என்ன ஆச்சு… யாருக்காக இப்படி ஒரு பதிவு !
சென்னை : நடிகை சமந்தா கோபமான ஒரு பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், சமந்தாவுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி ஒரு பதிவு என்று கேட்டு வருகின்றனர்.
விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தா சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகவே மாறி உள்ளார். இதனால் இவர் குறித்து எந்த செய்தி வந்தாலும் அது இணையத்தில் டிராண்டாகி விடுகிறது.
தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நடிகை சமந்தா
தென்னிந்திய நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் சமந்தா, தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கைவசம் பல படங்கள்
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல்28ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், சமந்தா சகுந்தலம், யசோதா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷ்ன் பணிகள் முடிந்து படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், விஜயதேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.

தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்
இந்நிலையில், நடிகை சமந்தா கோபத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என் மவுனத்தை அறியாமை என்றும் என் அமைதியை ஏற்றுக் கொள்வது என்றும் என் அன்பை பலவீனம் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். என் கருணைக்கும் எக்ஸ்பயரி தேதி இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

கோபத்தில் சமந்தா
இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி ஒரு பதிவினை போட்டுள்ளார் என கேட்டுள்ளனார். நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், காஜல் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என நடிகை சமந்தாவை இணையத்தில் மீண்டும் வம்பு இழுக்கத் தொடங்கி விட்டனர். இதனால், கடுப்பான சமந்தா கோபத்தில் இப்படி ஒரு பதிவினைப் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











