Samantha: சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. சரியான பதிலடி கொடுத்த சாம்!
சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்நிலையில் இடையில் தன்னுடைய உடல்நல பாதிப்பு காரணமாக படங்களில் நடிக்காமல் விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இதையடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் க்யூட் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன.
இதனிடையே மலையாளத்திலும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ள சமந்தா, அங்கு தன்னுடைய முதல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே, சமந்தா நடிப்பில் பாலிவுட்டில் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடரும் விரைவில் ரிலீசாக உள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சமந்தா ஈடுபட்டு வருகிறார்.

நடிகை சமந்தா: சமந்தா முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்த பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டன. குறிப்பாக விஜய்யுடன் சமந்தாவின் காம்பினேஷன் மற்றும் அவர்களது கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக பார்க்கப்பட்டது. இவர்களது ஜோடி தெறி படத்தில் மிகச்சிறப்பாக அமைந்தது. சிறிது நேரமே இந்த படத்தில் வந்தாலும் தன்னுடைய க்யூட்னசால் இந்த கேரக்டருக்கு மிகப்பெரிய வெயிட்டை கொடுத்திருந்தார் சமந்தா.
சிட்டாடல் ஹனி பன்னி தொடர்: தற்போது இந்த தொடர் பாலிவுட்டில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமந்தா கேரக்டரில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தெறி படத்தில் சமந்தாவிற்கு கிடைத்த வரவேற்பை இந்த படத்தில் கீர்த்தி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் சமந்தாவின் வாழ்க்கையில் சில ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு சமீப காலங்களாக நேரம் சரியில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மயோசிட்டிஸ் என்ற அறிய வகை நோய் பாதிப்பு அதன் சிகிச்சைக்காக படங்களில் நடிக்காமல் இருந்தது என அடுத்தடுத்த பல பிரச்சனைகளை சந்தித்து விட்டார் சமந்தா.
மீண்டும் ஃபார்மில் சமந்தா: ஆயினும் அவற்றில் இருந்து எல்லாம் மீண்டு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அடுத்ததாக அவரது நடிப்பில் பாலிவுட்டில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் ரிலீசாகவுள்ளது. இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்துள்ளார் சமந்தா. இதன் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் தொடரின் ஃபாலோ-அப்பாக இந்த தொடர் உருவாகியுள்ளது. இதனிடையே மலையாளத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் சமந்தா.
கடுப்பான சமந்தா: சிட்டாடல் ஹனி பன்னி தொடரின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அடுத்தடுத்து அவர் பதில் அளித்ததை பார்க்க முடிந்தது. இதில் தன்னுடைய வாழ்க்கையில் தான் சில தவறான முடிவுகளை எடுத்ததாக அவர் மனம் திறந்திருந்தார். இதனிடையே அவரிடம் ரசிகர் ஒருவர் அவரது உடம்பை கொஞ்சம் தேற்றுமாறு தெரிவித்திருந்தார். இதை கேட்ட சமந்தா கடுப்பாகிவிட்டார். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில தேர்ந்தெடுத்த உணவுகளை மட்டுமே தான் எடுக்க முடியும் என்றும் உடலை அப்படியே நினைத்தபடி ஏற்றிவிட முடியாது என்றும் சமந்தா கடுப்புடன் பதில் அளித்ததை பார்க்க முடிந்தது.
வாழு வாழவிடு: மேலும் நாம் 2024ம் ஆண்டில் உள்ளோம், வாழு வாழவிடு என்றும் சமந்தா அந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் நடிகை என்பதற்காக அவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுவிடலாம் என்று ரசிகர்கள் நினைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விரைவிலேயே தன்னுடைய உடல் நல பாதிப்பிலிருந்து சமந்தா வெளிவந்து இவர்களுக்கு physicalஆகவும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











