என்னோட முன்னேற்றத்திற்கு பயம்தான் காரணம்.. சமந்தா பகிர்ந்த சீக்ரெட்!
ஐதராபாத் : நடிகை சமந்தா அடுத்தடுத்த படங்களில் இந்திய அளவில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்கள், வெப் தொடர்களில் கமிட்டாகியுள்ளார்.
இவரது யசோதா படம் வெளியாகி சிறப்பான ரீச்சை பெற்ற நிலையில், அடுத்ததாக சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களில் சமந்தா தற்போது ஈடுபட்டுள்ளார்.
சாகுந்தலம் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க தான் பயந்ததாக சமந்தா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்களிலும், வெப் தொடர்களிலும் கமிட்டாகி நடித்து வருபவர். தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்ததன்மூலம் பாலிவுட்டில் அதிகமான கவனத்தை ஈர்த்திருந்தார் சமந்தா. இந்தப் படத்தையடுத்தே பாலிவுட்டிலும் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

13 ஆண்டுகால திரைப்பயணம்
தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என அடுத்தடுத்த ஹீரோக்களுடன் நடித்துள்ள சமந்தா, தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார். தன்னுடைய 13 ஆண்டுகால திரைப்பயணத்தில் சிறப்பான பல ஹீரோக்களுடன் சிறப்பான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது யசோதா படம் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

சாகுந்தலம் படம்
இதையடுத்து தற்போது அவரது நடிப்பில் சாகுந்தலம் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக அவர் தொடர்ந்து மீடியாவை சந்தித்து வருகிறார். படம் குறித்தும் தன்னுடைய கேரக்டர் குறித்தும் அதிகமான ஷேரிங்குகளை அவர் இந்த பேட்டிகளில் கூறி வருகிறார். சாகுந்தலம் படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது தான் அந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டேன் என்றும் அந்த நளினம், கம்பீரம் போன்றவை தனக்கு இல்லை என்றும் கூறி அந்த கேரக்டரை மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.

சமந்தாவின் பயம்
இந்தக் கேரக்டரை ஏற்க முதலில் பயமாக இருந்தாலும் படக்குழுவினர் தன்னை வற்புறுத்தி இந்தக் கேரக்டரை ஏற்க வைத்ததாகவும் தற்போது அந்த கேரக்டர் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் சமந்தா கூறியுள்ளார். மேலும் ஒரு விஷயம் தனக்கு பயத்தை ஏற்படுத்தினால் அதை செய்தே ஆக வேண்டும் என்று தனக்குள் வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவும் அதை நடிப்பில் பின்பற்றி வருவதாகவும் அதனால்தான் இந்த கேரக்டரை சேலஞ்சிங்காக ஏற்று நடித்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.

சக்சசிற்கு காரணமான பயம்
ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் இந்த பயம்தான் கடந்த 3 ஆண்டுகளாக தன்னை வழி நடத்தி வருவதாகவும் சமந்தா கூறியுள்ளார். தன்னுடைய தொடர் முன்னேற்றத்திற்கும் இந்த பயமே காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைத்தன்யாவுடன் பிரிவை அறிவித்த சமந்தா, தொடர்ந்து மயோசிட்டிஸ் என்ற நோயில் சிக்கி அவதிப்பட்டார். அப்போது அவருக்கு ஆறுதலாக அவரது நண்பர்களும், ஆன்மீகமும் இருந்தது. இப்போதுதான் தெரிகிறது அவரது பயமும் அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளது என்று.


Click it and Unblock the Notifications











