Samantha: Stop It Guys! ஜிம் சூட்டில் இருந்த சமந்தாவிடம் வம்பிழுத்தது யார்? செம கடுப்பாகிட்டாரே!

மும்பை: நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இன்றைக்கு பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக உள்ள நடிகை சமந்தாவுக்கு ரசிகர்கள் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது அதில் அவர் செம கடுப்பில் Stop It Guys என்று கூறிவிட்டு காருக்குச் செல்கிறார்.

நடிகை சமந்தா தற்போது பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். அடிக்கடி ஊர் சுற்றுகிறார். தன்னை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் விஷயங்கள் மீது சமந்தா கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் கூட, தான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், முன்பெல்லாம் தேவையில்லாத பல விஷயங்களில் கவனத்தை செலுத்தி நிம்மதியை கெடுத்துக் கொண்டதாகவும், தற்போது எவையெல்லாம் என்னை சந்தோஷமாக்குகிறது என்பது குறித்து தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிரும் தனது புகைப்படங்களுக்கு நச்சென கேப்ஷன் இடுவார். இது பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் அதற்கும் மிகுந்த வரவேற்பைப் அளித்து வருகிறார்கள். கடைசியாக கூட ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை சமந்தா பகிர்ந்திருந்தார். அதற்கு, " எந்த அலையும் நிலைக்காது, எந்த புயலும் நிரந்தரமாக இருக்காது, எல்லாவற்றையும் கடந்து சென்றுதான் ஆகவேண்டும். அதன் பின்னர்தான் வழியைக் கண்டுபிடிக்க முடியும்" என கேப்ஷன் இட்டார். இவரது இந்த போஸ்ட்க்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட் களையும் வாரி வழங்கி வந்தாலும், சிலர் சமந்தாவின் கேப்ஷன், நாக சைதன்யாவை அட்டாக் செய்வது போல உள்ளது என தெரிவித்தார்கள்.

Actress Samantha Ruth Prabhu Anger At Public Place With Gym Dress

கடுப்பான சமந்தா: இந்நிலையில் இணையத்தில் சமந்தாவின் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. வீடியோவைப் பார்க்கும்போது, சமந்தா ஜிம்மில் இருந்து வெளியே வந்ததைப் பார்த்த ரசிகர்கள் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தொந்தரவு செய்துள்ளார்கள். போனில் பேசிக்கொண்டு இருந்த சமந்தாவுக்கு ரசிகர்களில் இந்த செயல் எரிச்சலைக் கொடுத்துள்ளது. இதனால் கடுப்பான சமந்தா கோபத்தில் கத்தி விட்டு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார். மேலும் அந்த வீடியோவில் Stop It Guys என கத்துகிறார். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் சமந்தா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்.


ஜிம்மில் ஏதாவது: இவரது கோபத்திற்கு என்ன காரணம்? ஜிம்மில் ஏதாவது அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய சம்பவம் ஏதாவது நடந்ததா? அல்லது வெளியே ரசிகர்கள் அவரை வீடியோ எடுக்க பின் தொடர்ந்து தொந்தரவு செய்ததா என பல கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள். அதேநேரத்தில் சில இணையவாசிகள், நடிகையாக இருந்தாலும் சமந்தாவும் நம்மில் ஒருவர் தான். அவர் யாரிடமோ போன் பேசிக்கொண்டு இருக்கிறார், அப்போது அவரை தொந்தரவு செய்வது போல நடந்து கொண்டால் கோபம் வரத்தானே செய்யும். போன் பேசிய பின்னர் அவரை புகைப்படம் எடுத்திருந்தால் கூட அவர் கோபப்பட்டிருக்க மாட்டார் என்று கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X