Samantha: சமந்தாவுக்கு இப்படி ஒரு நிறைவேறாத ஆசை.. எமோஷனல் பேச்சு.. ரசிகர்கள் சொல்லும் ஆறுதல்!

சிட்னி: நடிகை சமந்தா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என அனைத்திலும் மிகவும் ஆக்டிவாக நடித்து வருபவராக உள்ளார். சமந்தாவின் விவாகரத்துக்குப் பின்னர் அவரது சினிமா பயணம் சிறப்பாக அமைந்தாலும், அவர் குறித்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் உள்ளது. இப்படியான நிலையில் சமந்தா தனது நிறைவேறாத ஆசை குறித்து பேசியுள்ளார். அது குறித்து காணலாம்.

சமந்தா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்போது பாலிவுட்டிலும் கவனிக்கப்படும் நடிகையாக இருக்கும் சமந்தா இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். மேலும், இவர் படங்களில் கமிட் ஆவதை விட, வெப் சீரிஸில் அதிகம் கமிட் ஆகி, ஓடிடி தளங்கள் வாயிலாக ரசிகர்களைச் சென்று அடைகிறார்.

சமந்தாவின் காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை அதன் பின்னர் ஏற்பட்ட விவாகரத்து என அனைத்தும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான் என்றாலும், சமந்தாவின் கடந்த காலம் குறித்த தகவல்கள் அவ்வப்போது ஏதாவது புகைச்சலாக கிளம்பிக் கொண்டு தான் உள்ளது. இதில் குறிப்பாக, சமந்தாவை விவாகரத்து செய்த போது, நாக சைதன்யா தரப்பில் இருந்து ரூபாய் 200 கோடிகள் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்தார்கள், ஆனால் சமந்தா அதை ஒரே வார்த்தையாக மறுத்துவிட்டார்.

Actress Samantha Ruth Prabhu Emotional Speech About Her Unfulfilled Dream

எமோஷ்னல்: சமந்தா தமிழில் கடைசியாக நேரடியாக நடித்த படம் என்றால் அது, காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தான். இந்த படத்தில் கதீஜா கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்திருப்பார். அதன் பின்னர் சமந்தா கடந்த சில ஆண்டுகளாக எந்த படமும் தமிழில் கொடுக்கவில்லை. ஆனாலும் சமந்தா மீது ரசிகர்களுக்கு எப்போதும் அன்பு இருந்து கொண்டுதான் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா, மிகவும் எமோஷனலாக பேசி, ரசிகர்களின் அன்புக்கு நன்றி கூறினார்.

Actress Samantha Ruth Prabhu Emotional Speech About Her Unfulfilled Dream

நிறைவேறாத கனவு: இப்படியான நிலையில் சமந்தா, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமந்தா, பேசும்போது மிகவும் எமோஷனலாக தனது நிறைவேறாத கனவு குறித்து பேசினார். அதாவது அவர் பேசும்போது, " 15 ஆண்டுகளுக்கு முன்னர் எனது கனவாக இருந்த விஷயம் என்றால் அது, சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதுதான். இன்றைக்கு நீங்கள் எப்படி இங்கு மாணவர்களாக உள்ளீர்களோ அதேபோல் நானும் மாணவராக இங்கு இருக்க வேண்டும் என கனவு கண்டேன். ஆனால் அந்த கனவை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது" என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். சமந்தாவின் இந்த எமோஷனலான பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Take a Poll

வரவேற்பு: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற சமந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல், சமந்தாவை பார்த்ததும் பலரம் கை குலுக்கி அவரை வரவேற்றார்கள். அப்போது ஒருவர் சமந்தாவின் கையை வேகமாக பிடிக்க, அந்த கணத்தில் சமந்தா நிலைதடுமாறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X