Samantha: Dead Hang சேலஞ்ச்.. சமந்தாவோட மோதிப் பார்க்க ரெடியா? என்னங்க இப்படி மாஸ் காட்டுறாங்க!

சென்னை: நடிகை சமந்தா இந்திய சினிமாவில் தற்போது நன்கு அறியப்பட்ட நடிகையாக உள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் இருந்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும், இன்றைக்கு அவர் அடையாளப்பட்டு நிற்கும் உயரம், உச்சம். தனது உடல் நலனில் எப்போதும் கவனமாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது ஜிம் வீடியோக்கள், தியான புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் பிரமித்துப் போயுள்ளார்கள்.

நடிகை சமந்தா குறித்த பல பழைய வீடியோக்கள் இணையத்தில் இப்போதும் உலா வந்து கொண்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட சமந்தாவை நோக்கி, ரசிகர் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், சமந்தா எனக் கத்தி அழைக்கிறார். அதற்கு உடனே சமந்தாவும்.. ஆ.. எனக் கூறிவிட்டு, அது என்னோட பெயர் தான் எனக் கூறுகிறார். தொடர்ந்து, நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை, நீங்கள் இவ்வளவு அன்பு செலுத்துகிறீர்கள். கடந்த சில ஆண்டுகளாக நான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடித்த படங்களும் ஹிட் அடிக்கவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் இவ்வளவு அன்பைத் தருகிறீர்கள்.

Actress Samantha Ruth Prabhu Gym Completes Dead Hang Challenge Video Goes Trending
Photo Credit:

ஆக்‌ஷன்: இப்போது எல்லாம் நான் ரொமான்ஸ் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் நடிப்பதில்லை, அதிகம் ஆக்‌ஷன் காட்சிகளில்தான் நடித்து வருகிறேன் என்று கூறினார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் இப்போதும் அதிகம் உலா வரும் வீடியோவாக உள்ளது. குறிப்பாக இணையவாசி ஒருவர் இந்த வீடியோவுக்கு, "நான் இந்த வீடியோவை ஆயிரம் முறை பார்த்துவிட்டேன், இன்னும் இரண்டாயிரம் முறை பார்ப்பேன்" என கேப்ஷன் இட்டு பகிர்ந்ததை மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளார்கள்.

சமீபத்தில் கோபம்: இப்படி இருக்கும்போது நடிகை சமந்தா அண்மையில் மிகவும் கோபமாக ஜிம்மில் இருந்து வெளியேறினார். அப்போது பத்திரிகையாளர்களைப் பார்த்து Sorry Guys என காட்டமாக சொன்ன வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஜிம்மில் எடுத்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சமந்தா செய்வதைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளார்கள்.

சமந்தா சேலஞ்ச்: அதாவது Dead Hang சேலஞ்ச் எனப்படும் சேலஞ்சை சமந்தா செய்கிறார். அவருடன் ஒரு ஆண் நண்பரும் பெண் தோழியும் உள்ளார்கள். மூவரும் ஒரே நேரத்தில் மேலே உள்ள கம்பியை பிடித்து தொங்குகிறார்கள். மூவரும் 90 நொடிகள், அதாவது ஒன்றரை நிமிடம் அந்தரத்தில் தொங்குகிறார்கள். சமந்தா உடன் இந்த சேலஞ்ச் செய்தவர்கள் கூட இடையில் தங்களது உடலை அசைக்கிறார்கள். ஆனால் சமந்தா கம்பியைப் பிடித்து தொங்க ஆரம்பத்ததில் இருந்து இறுதி வரை அப்படியே தொங்கினார். அவரது இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் அந்த வீடியோவோடு இந்த சேலஞ்சை பெண்கள் 90 நொடிக்கு தான் செய்ய முடியும் என கூறும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X