எந்த புயலும் நிலைக்காது.. கடந்து போ! சமந்தாவின் இன்றைய ஃபிளாசஃபி.. நாக சைதன்யாவோடு கோர்த்துவிடும் ரசிகர்கள்
ஐக்கிய அமீரகம்: நடிகை சமந்தா.. பல்லாவரம் பொண்ணு.. என தன்னை எப்போது மகிழ்ச்சியோடு அடையாளப்படுத்திக் கொள்பவர். கடைசியாக இவர் நேரடியாக தமிழில் நடித்த படம் என்றால் அது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தான். அதன் பின்னர் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. போராடினால் நாம் வெல்லலாம் என்ற பாடல் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்து வருகிறார். சமந்தாவின் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் ஒரு காலத்தில் காத்திருந்தனர். ஆனால் இப்போது அவரது புகைப்படங்களோடு சமந்தாவின் ஃபிளாசஃபிக்காகவும் ரசிகர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள்.
சமந்தா தனது திரைவாழ்க்கையில் இப்போதும் ராணிதான். மெலிந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று சொல்லுவார்களே அதுபோலத்தான் சமந்தாவின் திரைவாழ்க்கை. சமந்தா படங்களில் நடிக்கிறார் நடிக்கவில்லை, புதுப்படங்களில் கமிட் ஆகிறார், ஆகவில்லை அதெல்லாம் விஷயமே இல்லை, சமந்தா மீது அன்பு செலுத்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்தியா முழுவதும் உள்ளார்கள். சமந்தாவுக்காக படம் பார்க்க வேண்டும் எனும் ரசிகர்களை சமந்தா உருவாக்கி வைத்துள்ளதே அவரது திரைவாழ்க்கான வெற்றி. சமந்தா எப்போதுமே குயின் சமந்தா தான்.
அதே நேரத்தில் சமந்தாவின் சொந்த வாழ்க்கை குறித்து கமெண்ட் அடிக்காத இணையவாசிகள் மிகக் குறைவு. அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது குறித்து பலரும் பலவிதமாக கருத்துகள் கூறினார்கள். ஆனால் சமந்தா தனது விவாகரத்து குறித்து எங்காவது கேள்விகளை எதிர் கொண்டால் கூட மிகவும் நேர்த்தியாகவும் கண்ணியமாகவுமே பதில் அளித்துள்ளார்.

காதல் உண்மை: நாக சைதன்யாவுடன் காதல் வாழ்க்கை, அதன் பின்னர் திருமண வாழ்க்கை, நான்கு ஆண்டுகளில் விவாகரத்து என சமந்தா தனது சொந்த வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டுவிட்டார். நாக சைதன்யாவுடன் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், அவரைக் காதலித்த நாட்கள் உண்மையானவை, காதல் உண்மை என்பதை உணரவைக்கும் அளவுக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கவில்லை. இவரது இந்த புரிதலும் மெச்சூரிட்டியும், காதலர்கள் நிலையானவர்களாக இல்லாமல் போகலாம் ஆனால் காதல் நிலையானது என்று சொல்வதைப் போல உள்ளது.
இன்ஸ்டா போஸ்ட்: இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களையும் அதற்கு கேப்ஷனாக தனது மனதில் தோன்றுவதை, அல்லது எங்காவது படித்ததை பதிவிடுவார். இப்படி இருக்கும்போது, அவர் சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஹோட்டலான 'Qasr Al Sarab Desert Resort by Anantara' ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, அதற்கு தனது ஸ்டைலில் கேப்ஷனும் இட்டுள்ளார்.
கேப்ஷன்: அதாவது, " எந்த அலையும் நிலைக்காது, எந்த புயலும் நிரந்தரமாக இருக்காது, எல்லாவற்றையும் கடந்து சென்றுதான் ஆகவேண்டும். அதன் பின்னர்தான் வழியைக் கண்டுபிடிக்க முடியும்" என கேப்ஷன் இட்டுள்ளார். இவரது இந்த போஸ்ட்க்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வந்தாலும், சிலர் சமந்தாவின் கேப்ஷன், நாக சைதன்யாவை அட்டாக் செய்வது போல உள்ளது எனத் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











