மெத்தையில் படுத்துக்கொண்டு சமந்தா எடுத்த முடிவு.. கல்யாணத்திற்கு பிறகு மொத்தமா மாறிட்டாங்களே!
சென்னை: நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார். இந்த நேரத்தில் வரவிருக்கம் 2026 ஆம் ஆண்டை புது தீர்மானங்களுடன் வரவேற்க தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில், தனது புத்தாண்டுத் தீர்மானங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 2026 ஆம் ஆண்டிற்கான தனது முக்கிய இலக்கு அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதுதான் என்று பதிவிட்டுள்ளார். அதை வெளிப்படுத்தும் விதமாக, படுக்கையில் படுத்துக்கொண்டு சிரித்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தனது தீர்மானங்களை பட்டியலிட்டுள்ளார்.
நடிகை சமந்தா: அதில், "நன்றியுணர்வு, நீண்ட கால ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, ஆழமான உறவுகள், உள்ளுணர்வுக்குச் செவிசாய்த்தல், நிலையான வேலை, நிலையான வளர்ச்சி மற்றும் நோக்கத்துடன் கூடிய இணைப்பு" ஆகியவை சமந்தாவின் 2026 ஆம் ஆண்டு தீர்மானங்கள் என பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்டு இருக்கும் இந்த வார்த்தைகள், சாதனை, புகழுக்கு அப்பாற்பட்டு, மன அமைதி முக்கியம் என்பதை வெளிப்படுத்துகிறது. இவர், ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் வளர வேண்டும் என்ற விருப்பத்தை காட்டுகிறது.

2வது திருமணம்: நாக சைத்தன்யாவை பிரிந்த பிறகு ஊடகங்கள், செய்திதாள் என அனைத்திலும் சமந்தா பற்றிய செய்திகளே அதிகம் இடமெற்று இருந்தன. அதோ மட்டுமில்லாமல் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அதில் இருந்து மீண்டு வந்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி, சமந்தா மிகவும் விரும்பும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சமந்தா, தனது திருமணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து தனது திருமணத்தை அறிவித்தார்.
புது தீர்மானம்: நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோரு இயக்கிய 'தி ஃபேமிலி மேன் 2' என்ற வெப் தொடரில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதன் பின் அவர்கள் 'சிட்டாடல்: ஹனி பன்னி' வெப் தொடரில் மீண்டும் இணைந்தனர். நடிகர் நாக சைதன்யாவுடனான தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவு, கடந்த கால அனுபவங்களுக்குப் பிறகு, சமந்தா தற்போது வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அணுகும் மனநிலையில் இருக்கிறார்.அதன் வெளிப்பாடுதான், 2026-ஆம் ஆண்டை மெதுவாகவும், தெளிவாகவும், ஒரு நோக்கத்துடனும் பயணிக்கும் ஆண்டாக மாற்ற அவர் விரும்புகிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











