நடக்கக்கூட முடியலையா யாரு சொன்னா? ஃபுல் அப்ஸ் எடுத்த சமந்தா.. குவியும் வாழ்த்து!

சென்னை : நடிகை சமந்தா ஜிம்மில் ஃபுல் அப்ஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அதை டிரெண்டாக்கி வருகின்றனர்.

நடிகை சமந்தா பாலிவுட், டோலிவுட் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு படப்பிடிப்புக்கு திரும்பி உள்ளதால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா மயாசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட சமந்தா. இந்த நோய் குறித்து முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவை வெளியிட்டு தெரிவித்து இருந்தார். அதில், நான் சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டேன். நோயின் பாதிப்பு குறைந்ததும் அனைவரிடமும் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நினைத்ததைவிட குணமாக அதிக நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நோய் பாதிப்புடன் போராடி வருகிறேன் என்று தனது நோய் குறித்து தெரிவித்து இருந்தார்.

இன்னும் உயிருடன் இருக்கிறேன்

இன்னும் உயிருடன் இருக்கிறேன்

இதையடுத்து யாசோதா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, தனக்கு ஏற்பட்டிருக்கும் அரியவகை நோய் குறித்து பேசினார். அதில், சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருக்கும். சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கண்கலங்கினார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன சமந்தாவைப் பார்த்து ரசிகர்கள் கண்கலங்கினர்.

கண்கலங்கிய சமந்தா

கண்கலங்கிய சமந்தா

அதன் பின் நீண்டநாள் கழித்து சமந்தா சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து உள்ளேன். ஆனால், சினிமாவை எவ்வளவு நேசிக்கிறேன், சினிமா என்னை எவ்வளவு நேசிக்கிறது என்பது நிலையானது. சாகுந்தலத்தின் மூலம் இந்த காதல் இன்னும் வளரும் என்று நினைக்கிறேன் என்று பேசி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். உறுதியான மனநிலையைக் கொண்ட சமந்தா அடிக்கடி கண்கலங்கியதை ப்பார்த்து ரசிகர்கள் பதறிப்போனார்கள்.

சாப்பாட்டில் ஒன்னும் இல்லை

சாப்பாட்டில் ஒன்னும் இல்லை

இந்நிலையில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபுல் அப்ஸ் எடுக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதற்கு கேப்ஷனாக, நான் கடுமையான நாட்களை கடந்து விட்டேன். முடிந்தவரை மிகவும் கட்டுப்பாடான டயட்டில் இருப்பது, (ஆட்டோ இம்யூன் டயட்.. ஆம் அப்படி ஒன்று இருக்கிறது) வலிமை என்பது சாப்பாட்டில் இல்லை.. எப்படி நாம் சிந்திக்கிறோம் என்பதில் இருக்கிறது கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படிப்பட்ட உத்வேகத்தைத்தான் சமந்தாவிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்தோம் என்றும் கம் பேக் சமந்தா என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சாகுந்தலம்

திரில்லர் கதை அம்சம் கொண்ட படம் சிட்டாடல் என்ற இந்தி வெப் தொடரிலும், ஹாலிவுட் படம், குஷி, சி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும், சரித்திர கதையம்சம் கொண்ட சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பிப்ரவரி 17ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X