என்ன சொல்றீங்க… சமந்தாவுக்கே நடிப்பு பயிற்சியா?... அப்படி என்ன படம் அது ?
சென்னை : நடிகை சமந்தா புதிய வெப் தொடரில் நடிக்க பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய நடிகை சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
சகுந்தலம், யசோதா போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார்.

தி ஃபேமிலி மேன்
இயக்குனர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி இருந்த 'தி ஃபேமிலி மேன்' இணையதள தொடரின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது. குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பது போலவும், சென்னையில் குண்டு வெடிப்பிற்கு இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.

பாராட்டை பெற்றார் சமந்தா
இதில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியான போதே, இந்த வெப் சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால், அமேசான் பிரைமில் வெளியாகி சமந்தாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

புதிய வெப் தொடர்
இந்நிலையில், நடிகை சமந்தா, ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து புதிய வெப்தொடரில் நடிக்க இருக்கிறார். இந்த வெப் தொடருக்கு சிட்டாடல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபல நடிகர் வருண் தவானுடன் சமந்தா இணைந்து நடிக்க உள்ளார். அவென்சர்ஸ் பட இயக்குநர்களான ரஸ்ஸோ பிரதர்ஸ் இந்த வெப் தொடரை தயாரிக்கின்றனர்.

தீவிர பயிற்சி
இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி உள்ள நிலையில், இந்த வெப் தொடரில் பயங்கரமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம். இதற்காக இப்போதே மும்பையில் முகாமிட்டு தீவிர ஆக்ஷன் பயிற்சிகளை சமந்தா தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக வெளிவர உள்ள இந்த வெப் தொடரில் சமந்தா வேறலெவல் ஆக்ஷனில் மிரட்டப் போகிறார் என்பது மட்டும் உண்மை.


Click it and Unblock the Notifications











