இவ்வளவு நெருக்கம் தேவையா சமந்தா ?... நாகசைதன்யா செய்தது தப்பே இல்லை!

சென்னை : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ளார்

பிரிவுக்கு என்ன காரணம்

பிரிவுக்கு என்ன காரணம்

பார்பவர்களின் கண்படும் அளவுக்கு அன்பாக இருந்து வந்த நாகசைதன்யா,சமந்தா தம்பதியினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்து விட்டுபிரிந்தனர். இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில், சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும், ஹேர் ஸ்டைலிஷ் ஒருவருடன் சமந்தா நெருக்கமாக பழகி வந்ததால் நாகசைதன்யா அவரை விட்டு பிரிந்ததாகவும் பல தகவல்கள் பரவின.

இனி சேர வாய்ப்பில்லை

இனி சேர வாய்ப்பில்லை

சோஷியல் மீடியாவில் பலவிதமான தகவல்கள் பரவினாலும், இருவரும் எதற்காக பிரிகிறோம் என்ற தகவலை இதுவரை மனம் திறந்து சொல்லவில்லை. இவர்களின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று பெரிதும் நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனால், திருமண புடவையை நாகசைததன்யாவுக்கு திரும்பி அனுப்பி கொஞ்சம் இருந்த உறவையும் முறித்துகொண்டார் சமந்தா.

மொத்தமாக மாறிய சமந்தா

மொத்தமாக மாறிய சமந்தா

விவகாரத்திற்கு பிறகு மொத்தமாக மாறிய சமந்தா, உடற்பயிற்சி செய்வது, அதீத கவர்ச்சி போட்டோக்களை பகிர்வது, பார்டி, ஆண் நண்பர்களுடன் பழகுவது என டோடலாக மாறிவிட்டார். அதுமட்டும் இல்லாமல் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் ஏடாகூட கேள்விக்கு சரியான பதிலளித்து வருகிறார்.

நெருக்கமாக செல்ஃபி

நெருக்கமாக செல்ஃபி

இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹேர் ஸ்டைலிஷ்-ஆக இருக்கும் Loic chapoix என்பவருடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சமந்தா இதெல்லாம் என்றும், நாகசைதன்யா விவாகரத்து செய்ததில் தப்பே இல்லை என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். செல்ஃபி எடுப்பது என்பது ஒரு இயல்பான விஷயமாகிவிட்ட நிலையில், செல்ஃபி எடுத்தது ஒரு குத்தமா என்றும் ஒரு சில ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

2வது திருமணம்

2வது திருமணம்

அதே போல நாகசைதன்யாவும் 2வது திருமணத்திற்கு ஒகே சொல்விட்டதாகவும், இதனால், அவருக்கு பெண் பார்க்கும் வேலைகளை நடந்து வந்ததாகவும் ஒருசெய்தி பரவியது. ஆனால், இந்த தகவலை நாகசைதன்யா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X