‘Dear Samantha‘ பிறந்த நாளுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன ராம்சரண்… ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!
சென்னை : முன்னணி நடிகையான சமந்தா, தளபதி விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சன்ல், சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, தனுஷுடன் தங்கமகன், விஷாலுடன் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என பல டாப் நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பிரபல நடிகையாக உள்ளார். தற்போது அவர் சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் சமந்தாவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா
சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவரான சமந்தா...கெளதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியும் அப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாகவும் நடித்து ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொண்டார்.

Dear Samantha
சமந்தாவின் க்யூட்டான அழகில் மயங்கிய சினிமா ரசிகர்கள், அவர் பின் பூனை போல சுற்றி வருகின்றனர். தெலுங்கு நடிகர் ராம்சரண் சமந்தாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவும், ராம்சரணும் 'ரங்கஸ்தலம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

வருண் தவான்
சமந்தாவின் பிறந்தநாளுக்கு மும்பை பாலிவுட் நடிகர் வருண் தவான் அவருக்கு பிறந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

திறமையான சமந்தா
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, மிகவும் திறமையான மற்றும் முற்றிலும் பிரமிக்க வைக்கும் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களின் சிறந்ததாக இருக்கட்டும், ஆனால் எப்போதும் அன்பாக இருக்கட்டும் என புகழ்ந்துள்ளார்.

ஐ லவ் யூ
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஊஊ சொல்லி ஆட்டம் போட்ட சமந்தா, ஒரே பாடலில் எங்கேயோ போய்விட்டார். சமந்தாவின் பிறந்த நாளுக்கு Love and only love for you என பதிவிட்டுள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் இன்று திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில்,சமந்தா, நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இணையத்தில் வந்து கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











