For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சமந்தாவுக்கு என்னாச்சு என பதறிய ரசிகர்கள்: அமெரிக்கா போனது பத்தி உண்மையை சொன்ன மேனேஜர்!

  |

  சென்னை: தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.

  சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

  கடந்த சில தினங்களாக சமந்தாவின் உடல்நிலை குறித்து பரவி வந்த தகவல்களுக்கு, அவரின் மேலாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

  ஃபேவரைட் இயக்குநர் அட்லீ பிறந்த நாள் ஸ்பெஷல்..யாருக்கும் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!ஃபேவரைட் இயக்குநர் அட்லீ பிறந்த நாள் ஸ்பெஷல்..யாருக்கும் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!

  பான் இந்தியா ஸ்டார் சமந்தா

  பான் இந்தியா ஸ்டார் சமந்தா

  2010ல் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. கடந்த 12 ஆண்டுகால சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இப்போது மொழிகளைக் கடந்து ரவுண்டு அடித்து வருகிறார், நாக சைதன்யாவுடன் காதல், திருமணம், பிரிவு என பல சர்ச்சைகளையும் சோதனைகளையும் கடந்து, பான் இந்தியா லெவலில் முக்கியமான நடிகையாகிவிட்டார் சமந்தா. தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் கதிஜாவாக நடித்து கலக்கியிருந்தார்.

  யசோதா, சாகுந்தலம், குஷி

  யசோதா, சாகுந்தலம், குஷி

  கடந்தாண்டு சமந்தாவுக்கு தரமான இரண்டு பம்பர் ஹிட்கள் அமைந்தன. அமேசானில் வெளியான 'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ், ஓடிடி ரசிகர்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதேபோல், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் 'ஊ சொல்றீயா மாமா' பாடலுக்கு அவர் போட்ட கவர்ச்சி நடனம், திரையுலகையே அதிர வைத்தது. இதனைத் தொடர்ந்து யசோதா, சாகுந்தலம், விஜய் தேவரகொண்டாவுடன் குஷி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.

  சமந்தாவுக்கு அரிதான தோல் நோய்?

  சமந்தாவுக்கு அரிதான தோல் நோய்?

  இந்நிலையில், சமந்தாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்' என்ற தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதிக வெளிச்சத்தில் நடித்ததால் அலர்ஜி ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் 'அஞ்சான்' படப்பிடிப்பின்போது அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். ஷூட்டிங்கின் போது அதிகளவில் லைட்டிங் பயன்படுத்துவதே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

  மேனேஜர் கொடுத்த விளக்கம்

  மேனேஜர் கொடுத்த விளக்கம்

  சமந்தா கடந்த சில தினங்களாக எதிலும் தலை காட்டாமல் இருந்து வருகிறார். மேலும் அவரது எந்த போட்டோஷுட்டும் வெளியாகவில்லை. ஆனால், யசோதா படத்தின் டீசர் மட்டும் வெளியானது. இந்நிலையில் சமந்தா கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது. சூரிய ஒளியால் ஏற்படும் அரிதான தோல் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து சமந்தாவின் மேலாள மகேந்திரா விளக்கம் அளித்துள்ளார். "சாம் மீது வரும் வதந்திகளில் எதுவும் உண்மையில்லை, அவர் நலமாக இருக்கிறார். இவை வெறும் வதந்திகள் என்பதால் அதனை யாரும் தயவுசெய்து நம்ப வேண்டாம். சமந்தா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.

  English summary
  Samantha is busy acting in Tamil and Telugu films. There were reports that She was suffering from a rare skin disease. It was also said that Samantha has gone to America to get treatment for it. Now Samantha's manager has explained the rumors
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X