உடல்நிலை தேறிய சமந்தா.. சமந்தாவிற்கு கைகொடுத்தது யார்ன்னு பாருங்க!

ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா பிரிவிற்கு பிறகு சமந்தா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

அப்போதுதான் சமந்தாவிற்கு அரியவகை நோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது தன்னுடைய நோயிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார் சமந்தா. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரை ஆக்டிவாக காண முடிகிறது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா


நடிகை சமந்தா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல், இந்தியிலும் நடித்து வருகிறார். தன்னுடைய அழகால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டுவந்த சமந்தா, நாக சைத்தன்யாவுடனான தன்னுடைய திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

சமந்தா விவாகரத்து

சமந்தா விவாகரத்து

சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் கூட்டாக தங்களின் திருமணத்தை முறித்துக் கொள்ளும் முடிவை அறிவித்த நிலையில், சமந்தா அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம், தன்னுடைய சமூக வலைதளங்கள், படங்கள், ஆன்மீகம் இவற்றின் உதவியோடு கடந்து வந்தார் சமந்தா.

பாலிவுட்டிலும் படம்

பாலிவுட்டிலும் படம்

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கமிட்டாகி நடித்து வந்தார் சமந்தா. அப்போது அவருக்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடல் மெலிந்து காணப்பட்டார் சமந்தா. அவரது முகத்திலும் நோயின் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது.

சமந்தாவின் யசோதா படம்

சமந்தாவின் யசோதா படம்

இதனிடையே சமந்தாவின் யசோதா படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. படம் 10 நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்தது. இந்தப் படத்தின் வரவேற்பை தொடர்ந்து சமந்தாவும் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஆக்டிவுடன் காணப்படுகிறார்.

தனக்கு தானே நம்பிக்கை

தனக்கு தானே நம்பிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனக்கு தானே சமந்தா நம்பிக்கை கூறிக் கொள்ளும்படியாக புகைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் சமந்தா வொர்க் அவுட் செய்யும்படியான வீடியோக்கள், புகைப்படங்களும் வெளியாகி சமந்தா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் சமந்தா

ஐதராபாத்தில் சமந்தா


இதனிடையே, சமந்தா நோய் பாதிப்பில் இருந்தபோது சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று அவரது அம்மாதான், அவரை கவனித்துக் கொண்டுள்ளார். விவாகரத்திற்கு பிறகு சமந்தா சென்னை திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுவரை அவர் ஐதராபாத்தில்தான் உள்ளார்.

சாகுந்தலம் படம்

சாகுந்தலம் படம்


சமந்தாவின் யசோதா படத்தை தொடர்ந்து அடுத்ததாக இம்மாதம் 17ம் தேதி அவரது சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. சரித்திரப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X