எல்லாத்துக்கும் நோ சொன்னேன்.. நான் நினைத்திருந்தால் கோடியில் சம்பாதித்து இருப்பேன்..சமந்தா!

சென்னை: நடிகை சமந்தா தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா திரையுலகிலேயே டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கின்றார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா தொடர்ந்து பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, எல்லாத்துக்கும் நோ சொன்னேன், நான் நினைத்து இருந்தால் கோடி கோடியாக சம்பாதித்து இருப்பேன் என்று கூறியுள்ளார்.

பிஸியாக சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த சமந்தா, முதல் படத்தில் இருந்தே காதலித்து வந்த நாகார்ஜூனின் மகன் நாகா சைத்தன்யாவை மணந்தார்.திருமணத்திற்கு பிறகும் ஒரு சில தெலுங்கு படத்தில் நடித்து வந்த சமந்தா, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் நாயகியாக நடித்தார். அப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யுடன் தெறி, மெர்சல் என மூன்று படங்களில் தளபதியுடன் ஜோடி போட்டு நடித்தார்.விஜய்யுடன் இணைந்து நடித்த மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

samantha interview

நோ சொன்னேன்: அந்த படத்திற்கு பிறகு சமந்தா பல திரைப்படத்தில் நடித்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை. அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது, சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, நான் சினிமா துறையில் நுழையும் போது, ஒரு நடிகரோ ஒரு நடிகையோ வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அனைத்து பிராண்டுகளிலும் அவரது முகம் இருக்கிறது என்பது தான் அர்த்தம். அப்போது, நான் நிறைய மல்டி நேஷனல் பிராண்டுகள் என்னை அவரது பிராண்ட் அம்பாசிடராக கேட்டனர். நானும், நல்ல புகழ், அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஏற்றுக்கொண்டு இந்த பிராண்டுகளில் விளம்பரத்தில் நடித்தேன்.

samantha interview

கோடியில் சம்பாதித்து இருப்பேன்: ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடலில் சில பிரச்சனைகள் வந்ததிலிருந்து நான் அதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை. இப்போதெல்லாம் நான், ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்கு முன்பு குறைந்த பட்சம் மூன்று டாக்டர்களிடமாவது ஒப்புதல் வாங்குகிறேன். கடந்த வருடம் எனக்கு 15 பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தன. ஆனால், நான் அந்த பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். கண்டிப்பாக அந்த விளம்பரங்களில் நான் நடித்திருந்தால் கோடிக்கணக்கில் எனக்கு பணம் கொடுத்திருப்பார்கள் என்று சமந்தா பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X