“சில கசப்பான அனுபவங்களால் பக்குவமடைந்து இருக்கிறேன்“….பிலாசஃபி பேசும் சமந்தா!

சென்னை : சில கசப்பான அனுபவங்களால் தற்போது பக்குவமடைந்து இருப்பதாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவின் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, புது உத்வேகத்துடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்பைவிட தற்போது ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு படுபிஸியாக இருக்கிறார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

முன்னணி நடிகையான சமந்தா, தளபதி விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சல், சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, தனுஷுடன் தங்கமகன், விஷாலுடன் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என பல டாப் நடிகர்களின் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

ஹிட் படங்கள்

ஹிட் படங்கள்

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு ஜட்டம் பாடலுக்கு ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார் சமந்தா. அந்த படத்தின் மிகப்பெரிய ஹிட்டுக்கு காரணமாக அமைந்தது அந்த பாடல் எனலாம். அதே போல கடந்த மாதம் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் கதிஜா ரோலில் பட்டையை கிளப்பி இருந்தார்.

மனம் திறந்து பேட்டி

மனம் திறந்து பேட்டி

இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள சமந்தா, ஒரு நடிகையாக நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது சவாலான ஒரு விஷயம். மக்கள் மனதில் அந்த கதாபாத்திரம் தான் நிலைத்து இருக்கும். அந்த வகையில் எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் அடுத்த உயரத்திற்குப் போகவேண்டும் என்று கூறினார்.

பக்குவம் வந்துள்ளது

பக்குவம் வந்துள்ளது

வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களால் நன்கு பக்குவமடைந்து இருக்கிறேன். இப்போது கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கடினமான ஆக்‌ஷன் காட்சிகளானாலும் சரி தைரியமாகச் செய்வேன். ஆனால், இது போல நான் கடந்த காலத்தில் இல்லை என்பதுதான் உண்மை என சமந்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

தமிழ், தெலுங்கு, ஓடிடி என அனைத்திலும் தடம் பதித்த சமந்தா, அடுத்து ஹாலிவுட்டிலும் நடிக்க இருக்கிறார். பிலிப் ஜான் இயக்கத்தில் 'தி அரேஞ்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடிக்க இருக்கிறார் சமந்தா. மேலும் சாகுந்தலம், யாசோதா, விஜய்தேவரகொண்டா உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X