நான் போராட்ட குணம் கொண்டவள்.. சமந்தா சொன்னத பாருங்க!

சென்னை : நடிகை சமந்தா இந்திய அளவில் மிகச்சிறந்த ஹீரோயினாக தொடர்ந்து இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இவரது அழகு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Samantha Tweet | வேலைய பாத்துட்டு போகணும்... *Celebrity | Filmibeat Tamil

பத்து ஆண்டுகளுக்கும் மேலான சமந்தாவின் சினிமா பயணத்தில் தற்போதுவரை மிகவும் கிரேஸ்புல்லான நடிகையாக இவர் காணப்படுகிறார்.

இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில், அவ்வப்போது இவரை ட்விட்டரில் இவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக தொடர்ந்து இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என சுற்றி சுற்றி நடித்து வருகிறார். தொடர்ந்து விளம்பரப் படங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்கிறார். சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷயுடன் இணைந்து கலகலப்பான ஷோவை கொடுத்திருந்தார்.

 காபி வித் கரண் நிகழ்ச்சி

காபி வித் கரண் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் சமந்தாவை அக்ஷய் தூக்கி வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இருவரும் ரொமாண்டிக்காக ஆடிய நடனமும் அனைவரையும் கவர்ந்தது. அக்ஷயுடன் பாலிவுட்டில் சமந்தா புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்நிலையில் இவரது நடிப்பில் யசோதா மற்றும் குஷி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் யசோதா 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் படம்

விஜய் தேவரகொண்டாவுடன் படம்

இதேபோல விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்துள்ள குஷி படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான சூட்டிங் காஷ்மீரின் பல பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்காகவும் ரசிகர்களை மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிறப்பான காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

சிறப்பான காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

இதனிடையே சமீபத்தில் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்து வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கதீஜா கேரக்டர் மிகுந்த துடிப்பு மிக்கவராக அவரைக் காட்டியது. ரசிகர்களையும் இந்தக் கேரக்டர் வெகுவாக கவர்ந்தது.

அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள்

அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள்

இதுபோல அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார் சமந்தா. நாக சைத்தன்யாவுடனான திருமணம் மற்றும் விவாகரத்து அறிவிப்பு என எதுவும் இவரது கேரியரை கொஞ்சமும் பாதிக்கவில்லை. தொடர்ந்து விஜய், சூர்யா என தமிழில் ஒரு ரவுண்ட் அடித்தார்.

தளபதி 67 படத்தில் சமந்தா?

தளபதி 67 படத்தில் சமந்தா?

அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்திலும் இவர் இணையவுள்ளதாகவும், நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதன்பின்பு சமந்தா உள்ளிட்டவர்களின் கேரக்டர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்ட குணம் கொண்டவள்

போராட்ட குணம் கொண்டவள்

இதனிடையே, சமந்தாவின் சமீபத்திய பேட்டியில் தன்னுடைய குணநலனை வெளிப்படுத்தியுள்ளார். சிறந்த படங்களின்மூலம் தன்னை தொடர்ந்து நிரூபிக்க போராடி வருவதாக அவர் கூறியுள்ளார். சாதாரணமாகவே தான் மிகுந்த போராட்ட குணம் கொண்டவள் என்றும் சமந்தா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X