Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மயோசிடிஸ் நோயால் அவதிப்படும் சமந்தா..இப்போது என்ன சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் தெரியுமா?
சென்னை : மயோசிடிஸ் நோயால் அவதிப்படும் சமந்தா, தற்போது எடுத்துக்கொள்ளும் சிகிச்சை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அனைவரும் விரும்பக்கூடிய நடிகையான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சினைகளை சந்தித்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு காதல் கணவரை பிரிந்தார், தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமந்தாவை நினைத்து அவரது ரசிககர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சமந்தா நல்லா இருக்காங்க… எல்லாமே வதந்தி தான்... முக்கியமான இடத்தில் இருந்து வந்த மெசேஜ்

நடிகை சமந்தா
நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் நட்சத்திர ஜோடியாக பார்ட்டிகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த இவர்களில் வாழ்க்கையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

மனம் நொந்த சமந்தா
பிரிவுக்கான காரணம் தெரியாததால், சமந்தா கர்ப்பத்தை கலைத்துவிட்டார், சிகையலங்கார நிபுணருடன் தொடர்பு வைத்திருந்தார் என பல வதந்திகள் எழுந்து, சமந்தாவை மேலும் கவலையில் ஆழ்த்தியது. இதனால் நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நாள் ஆன்மீகப்பயணம் செய்து மனதை தேற்றிக்கொண்டார்.

யசோதா
இதையடுத்து, தனது ஒட்டுமொத்த கவனத்தையும் நடிப்பின் மீது திருப்பிய சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா... ஊ ஊ சொல்றியா என்ற பாடலுக்கு அதீத கவர்ச்சியில் ஆட்டம் போட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். இதையடுத்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களான யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் கமிட்டார். இதில் யசோதா கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

கண்கலங்கிய சமந்தா
யசோதா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. சில நாட்களில் ஒரு அடி நடப்பதுக்கூட சிரமமாக இருக்கிறது. இருந்த போது அனைத்தையும் கடந்த நான் தற்போது உயிருடன் இருக்கிறேன் என்று தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து கண்ணீர் மல்க பேசி தனது ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்தார்.

மயோசிடிஸ் நோய்
தசை அழற்சி எனப்படும் இந்த நோய், தசையில் உள்ள செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தி சிதைத்துவிடும். இந்த நோய் இரு பாலினத்தவருக்கும் வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் ஏற்பட்டால், படுக்கையிலிருந்து எழுவது, நடப்பது, அமர்ந்தும், தசை வீக்கம், தசை வலி ஏற்படும் என கூறப்படுகிறது.

ஆயுர்வேத சிகிச்சை
அமெரிக்க மருத்துவமனையில் மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா, இந்தியா திரும்பிய பிறகும் அதே சிகிச்சை முறையை பின்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சை முறையில் உடல் குணமடையாததால், கேரள ஆயுர்வேத மருத்துவர்களால் சிகிச்சை கொடுக்கப்பட்டும் வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதிலிருந்து விடுபட பல காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.