அடுத்தடுத்த வொர்க்-அவுட் வீடியோக்களை வெளியிடும் சமந்தா.. மீண்டும் பார்மிற்கு திரும்பி அசத்தல்!

ஐதராபாத் : நடிகை சமந்தா நடிப்பில் வரும் 17ம் தேதி சாகுந்தலம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.

முன்னதாக சமந்தாவின் யசோதா படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வசூல்மழையை பொழிந்துள்ளது.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா, தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றில் சமந்தாவை பார்க்க முடிகிறது. தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் சமந்தா.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

நாக சைத்தன்யாவை திருமணம் செய்த சமந்தா, தொடர்ந்து தன்னுடைய விவாகரத்து முடிவையும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இவர்கள் இருவரும் கூட்டாக இந்த முடிவை அறிவித்த நிலையில், ரசிகர்களிடையே இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சமந்தா தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்.

அரியவகை நோய் பாதிப்பு

அரியவகை நோய் பாதிப்பு

இதனிடையே, சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக இந்த நோய்க்கான சிசிக்சையை சமந்தா எடுத்து வந்தார். அமெரிக்காவிலும் அவர் சிகிச்சை எடுத்துவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அதிலிருந்து அவர் மீண்டு வருகிறார்.

தனக்கு தானே நம்பிக்கை

தனக்கு தானே நம்பிக்கை

கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் இருந்து ஒதுங்கியிருந்த சமந்தா, தற்போது நோய் பாதிப்பிலிருந்து மீண்டு, மீண்டும் ஆக்டிவாக மாறியுள்ளார். தொடர்ந்து தனது பிட்னஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தனக்கு தானே நம்பிக்கை தெரிவிக்கும்வகையிலும் இவரது பதிவுகள் காணப்பட்டன.

பிட்னஸ் வீடியோ பகிர்வு

பிட்னஸ் வீடியோ பகிர்வு

இதனிடையே தற்போது மீண்டும் தனது பிட்னஸ் வீடியோவை சமந்தா பதிவிட்டுள்ளார். இதையடுத்து சமந்தாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். சமந்தா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யசோதா படம் ரிலீசாகி வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 17ம் தேதி சாகுந்தலம் படம் ரிலீசாகவுள்ளது.

மீண்டும் பார்மிற்கு திரும்பிய சமந்தா

மீண்டும் பார்மிற்கு திரும்பிய சமந்தா

நோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக படங்களில் கமிட்டாகாமல் இருந்த சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்களில் கமிட்டாகி வருகிறார். சிட்டாடல் என்ற வெப் தொடரில் கமிட்டாகியுள்ளார்.இதனிடையே மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக பிட்னஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

தற்போது சமந்தா வெளியிட்டுள்ள பிட்னஸ் வீடியோவை ரசிகர்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சமந்தா எப்போதுமே ரசிகர்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் ஆக்டிவாகியுள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X